தங்கம் வாங்க இதுவே சரியான டைம்! மக்களே விரைந்து முந்துங்கள்!
கொரோனா தொற்று காலத்தில் மக்கள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் பெட்ரோல்,டீசல் மற்றும் தங்கத்தின் விலை நிலையில்லாமல் ஏறி இறங்கி வருகிறது.இந்த கொரோனா தொற்றின் காலத்திலும் கூட சில திருமணங்கள் நடக்கிறது.தற்போது தங்கத்தின் விலை ஓர் நாளில் ஏறியும் மறுநாளில் இறங்கியும் உள்ளது.இந்த தொற்று காலத்தில் மக்கள் தங்கம் வாங்கும் சூழலில் இல்லாவிட்டாலும் திருமணம் வைத்திருப்பவர்கள் தங்கம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அவ்வாறு தங்கம் வாங்குபவர்களுக்கு இது சரியான நேரம்.ஏனென்றால் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.60 குறைந்து தற்போது ரூ.36,600 க்கு விற்கப்பட்டு வருகிறது.ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு தற்போது ரூ.10 ரூபாய் குறைந்துள்ளது.ஓர் கிராம் தங்கம் தற்போது ரூ.4575 க்கு விற்பனையாகி வருகிறது.அதனால் தங்கம் வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் ஆகும்.அதனையடுத்து வெள்ளி ரூ.100 அதிகரித்துள்ளது.தற்போது 1 கிலோ வெள்ளியின் விலை 72,600 க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளியின் விலை தற்போது அதிகரித்துள்ளதால் அவ்வேளை செய்பவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.வெள்ளி விலை ஏறுமாயின் அதிகப்படியான மக்கள் வெள்ளி வாங்க விரும்பமாட்டார்கள்.அதனால் வெள்ளி தொழிலை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.