மதுபானங்களுக்கு இனி இது தான் விலை! தமிழக அரசின் அதிரடியான நடவடிக்கை!
நமது தமிழக அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தருவதும் டாஸ்மாக் கடைகள் தான். நமது தமிழகத்தில் அதிகப்பபடியனோர் மது பிரியர்கள் ஆகவும் மதுவிற்கு அடிமையாக உள்ளனர். பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி போராட்டமும் நடந்து வருகிறது. இந்த மதுவால் பல குடும்பங்கள் சீரழிக்கின்றது. அதனால் தமிழகத்தில் பெரும்பான்மையான பெண்கள் மதுக்கடைகளை முற்றிலும் மூடும் படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவ்வாறு இருக்கும் வகையில் கொரோனா தொற்று வந்தபோது கூட டோக்கன் வழங்கப்பட்டு மது பிரியர்களுக்கு மதுபானங்கள் வழங்கப்பட்டது. தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த போதில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
அவரும் மூடப்பட்டு மீண்டும் திறந்த பொழுது மக்கள் தொற்றை சிறிதும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். அதேபோல மதுபான கடைகள் மூடப்பட்ட இருந்தபோதிலும் பல இடங்களில் பிளாக்கில் மதுபானங்களை விற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரனோ தொற்று அதிக அளவு பாதிப்பினை சந்திப்பதற்கு முன்பு, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்தினர். தற்பொழுது விலை உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் முழுமை அடைந்துவிட்டது. அதுமட்டுமின்றி இந்த கொரோனா தொற்றின் காரணமாக பொருளாதார ரீதியாகவும் தமிழகம் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை தற்போது உயர்த்தியுள்ளனர். இன்று 12 மணி முதல் இந்த விலை அமலுக்கு வருகிறது. இனி ஒரு குவாட்டர் மற்றும் சாதாரண மது பானங்களுக்கு தற்போது இருக்கும் விலையை விட கூடுதலாக 10 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தபடியான உயர்ரக மது பானங்களுக்கு இருபது ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்ரக மது பானங்களுக்கு 40 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பீர் வகைகளுக்கு ரூ 10 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வினால் மது பிரியர்கள் சோகத்தில் உள்ளனர்.