இந்த வருடம் தரப்படும் பரிசு இதற்குத்தான்! இருவருக்கு பகிர்ந்தளிப்பு!

Photo of author

By Hasini

இந்த வருடம் தரப்படும் பரிசு இதற்குத்தான்! இருவருக்கு பகிர்ந்தளிப்பு!

ஒவ்வொரு வருடமும் எல்லா துறையிலும் மிகச் சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்காக கொடுக்கப்படும் ஒரு விருது தான் நோபல் பரிசு. அந்த விதத்தில் பலரை கௌரவிக்க பல்வேறு விருதுகள் இருந்தாலும் நோபல் பரிசின் மதிப்பு மிகுந்த மதிப்புக்குரியதாகும்.

ஒவ்வொரு வருடமும் இந்த விருதை யார் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் அனைவரிடமும் இருக்கும். உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை தேர்ந்தெடுத்து  தரப்படும்.

குறிப்பாக மிக சிறப்பாக செயல் ஆற்றியவர்களுக்கு மட்டுமே அதிலும் சாதனை படைத்தவர்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்து இந்த விருதுகளை வழங்குவார்கள். நோபல் பரிசைப் பெற வேண்டும் என்பது பல்வேறு துரை சார்ந்த சாதனையாளர்களின் லட்சியக் கனவாகவும் இருந்து வருகிறது.

இன்று திங்கட்கிழமை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி வெளியாகத் தொடங்கியது. முதலில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இந்த வருடத்திற்கான மிகச்சிறந்த நோபல் பரிசை இந்த வருடம் இரண்டு மருத்துவர்கள் பெற்றுள்ளனர். அவர்களின் பெயர் டாக்டர்கள் டேவிட் ஜூலியஸ்,   ஆர்டம் பட்டாஹவுட்டியன் என்பது ஆகும்.

அவர்களின் கண்டுபிடிப்பான உடலைத் தொடாமலேயே வெப்பம் ,வலி, உடல் அழுத்தம் மற்றும் இதர விவரங்களை கண்டறியும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக அவர்கள் இருவருக்கும் இன்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.