செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்! உயிருடன் மீட்ட மீட்பு பணியினர்!

0
95
The tragedy caused by the Selby craze! Rescue workers alive!
The tragedy caused by the Selby craze! Rescue workers alive!

செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்! உயிருடன் மீட்ட மீட்பு பணியினர்!

செல்ஃபி எடுக்கும் போது 140 அடி உயர நீர்வீழ்ச்சி அருகே இருந்த குகையில் தவறி விழுந்த நபரை இன்று மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். பெலகாவி மாவட்டத்தில் கோகாக்கில் என்ற சுற்றுலாத்தளம் ஒன்று உள்ளது. அங்கு அழகிய நீர் வீழ்ச்சியும் ஒன்று உள்ளது.

அது ஒரு சுற்றுலாத் தலமாகும். நேற்று முன்தினம் அந்த  சுற்றுலா தளத்திற்கு பிரதீப் சாகர் என்ற 30 வயதான வாலிபர் தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்தார். நீர் வீழ்ச்சியை கண்டு ரசித்த பிரதீப் அதன் அழகை பார்த்து ரசித்தவாறே நீர்வீழ்ச்சியின் மேற்பகுதிக்கு சென்று தன்னுடைய செல்போன் மூலம் செல்பி எடுக்க முயன்றார்.

ஆனால் அப்போது எதிர்பாராதவிதமாக நீர்வீழ்ச்சி அருகே இருந்த 140 அடி உயர குகைக்குள் அவர் தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கோகாக் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் பிரதீப்பை மீட்க மிக தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

ஆனால் அதற்குள்ளாக இரவாகி விட்டது. அதன் காரணமாக நேற்று அதிகாலை 3 மணி முதலே மீட்பு பணிகளை ஆரம்பித்து விட்டனர். அதன் காரணமாக இன்று அதிகாலை 4 மணி அளவில் அந்த 140 அடி உயர குகைக்குள் இருந்து பிரதீப்பை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

ஆனாலும் உணவு சாப்பிடாததன் காரணமாகவும், காயங்கள் ஏற்பட்டதன் காரணமாகவும் அவர் சோர்வாக காணப்பட்டார். அவரை தனிப்படையினர் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.