குழந்தைகளின் கல்வியை தொடர விடாமல் தடுப்பவருக்கு இதுதான் தண்டனையாம்!! நீதிபதியின் அதிரடி உத்தரவு!

Photo of author

By Parthipan K

குழந்தைகளின் கல்வியை தொடர விடாமல் தடுப்பவருக்கு இதுதான் தண்டனையாம்!! நீதிபதியின் அதிரடி உத்தரவு!

இந்தியாவில்  குழந்தை தொழிலாளர்கள் அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது தான் குறைந்து வருகிறது. இதனை முற்றிலும் குறைக்க வேண்டும் என்றால்  பெற்றோர்கள் தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அனைத்து பெற்றோர்களும், தங்களுடைய குழந்தைகள் அனைவரும் பள்ளிக்குச் சென்று படித்து நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்  என்ற  சிந்தனையை வளர்த்து  கொள்ள  வேண்டும்.

மேலும் தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு சார்பில் மனோஜிபட்டி தலைமையில்  அரசினர் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் கட்டாய கல்வி குறித்து  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.தஞ்சை மகளிர் கோர்ட் நீதிபதி மணி என்பவர் கலந்து கொண்டு பேசினார். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வியை பெற்றோர்கள் தடுத்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியானது தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.