“ஆஸ்பத்திரிக்கு இலவசம்” உண்மையான மாணிக்கம் இவர்தான்!

Photo of author

By Kowsalya

மதுரையில் ஆட்டோ காரர் ஒருவர் மருத்துவ அவசரத்திற்கு இலவசமாக ஏழை எளிய மக்களுக்கு ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் சேவை செய்து வருகிறார்.

பாஷா திரைப்படத்தில் வெளிவந்த பாடலைப்போல நடைமுறையில் அதனை வழிநடத்தி உண்மையான மாணிக்கமாக வாழ்ந்து வருகிறார். மதுரையை சேர்ந்த லட்சுமணன்.

இங்கு கொரோனா காலத்தில் பொருளாதார அடிப்படையில் எல்லோரும் முடங்கிப் போய் இருக்கிறார்கள். அனைத்து ஓட்டுநர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் சரி இந்த ஒரு பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறார்கள். லட்சுமணன் மூன்று குழந்தைகளையும் வேலைக்குச் செல்லும் தனது மனைவி வைத்துக்கொண்டு இன்னும் பல நெருக்கடியை சந்தித்து வருகிறார்.

எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் தன்னுடைய ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு அவசரத்திற்கு இலவசம் என்ற வாசகங்களை தனது ஆட்டோவில் எழுதிக் கொண்டு அனைவருக்கும் உதவி வருகிறார்.யார் வந்தாலும் அவரை ஏற்றிக்கொண்டு பத்திரமாக வீட்டிற்கு மருத்துவமனைக்கும் கொண்டு சேர்ப்பதை வேலையாக உள்ளார்.

இதை கவனித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் அவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பல பேரும் லட்சுமணன் அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். மேலும் அவரது உதவியை நாடி வருபவர்கள் அதிகமாகி விட்டனர்.

அப்பொழுது இலட்சுமணன் எடுத்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, இரண்டரை வருடங்களாக ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு வருமானமும் இல்லாத நிலையிலும், ஆட்டோ கடன் தவணை கட்ட முடியாத நிலையிலும், ஆட்டோவை வீட்டில் சும்மா நிறுத்தி வைத்திருக்காமல் நம்மால் முடிந்த உதவியை மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும், என்ற எண்ணத்தில் இலவசமாக ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறேன். யார் போன் செய்தாலும் உடனடியாக அவர் வீட்டிற்குச் சென்று மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ப்பேன். அவர்களாக ஏதாவது விருப்பப்பட்டு கொடுத்தால் வாங்கிக் கொள்வேன். ஆனால் ஏழைகளுடன் கண்டிப்பாக வாங்க மாட்டேன் ஒரு ரூபாய் கூட என அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அய்யாவை எனக்கு தெரியாது. காரில் இருந்து இறங்கியதும் போட்டோ பிடித்ததால் பைனான்ஸ் நிறுவனராக இருக்கும் என பயந்து விட்டேன். அவர் எனது சேவை மனதார பாராட்டி அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் என்பதை அறிந்தேன். அதை பார்த்த சென்னையை சேர்ந்த ஒரு பெண் எனக்கு ஆட்டோ செலவிற்காக சிறிது பணம் அனுப்பினார். அதை நான் ஆதரவற்று இருக்கும் தெருவோரம் கிடக்கும் மக்களுக்கு உணவளிக்கிறேன். இது நான் விளம்பரத்திற்காக அல்ல, என் மனதார செய்கிறேன் என்றார்.

கொரோனா குறித்து தேவையற்ற பயம் வேண்டாம். மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வதால் கொரோனா தனக்கு வராது என்ற அதீத நம்பிக்கையுடன் அவர் பேசுவது மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது.

அவருடைய உதவி உங்களுக்கு வேண்டும் என்றால், அவருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தால் 9498822696 என்ற எண்ணிற்கு அழைத்தது உதவலாம். உதவியும் பெறலாம்.