கடந்த வருடம் நடந்த கேரளா விமான விபத்துக்கு இதுதான் காரணம்! – வெளிவந்த தகவல்கள்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த ஆண்டு, ஆகஸ்டு 7ஆம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. சுமார் 190 பயணிகளுடன் வந்த அந்த விமானம் விமானத்தில் தரை இறங்கிய போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. விமான ஓடுதளத்தை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விமானம் இரண்டாகவும் உடைந்தது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்தவர்களில் 2 விமானிகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை அமைப்பு விசாரணையை நடத்தி வந்தது. இந்நிலையில் கோழிக்கோடு விமான விபத்து பற்றி அந்த விசாரணை அமைப்பானது நேற்று முடிவுகளை வெளியிட்டது. அந்த அறிக்கையில் விபத்துக்கான காரணங்கள் குறித்தும் தெரிவித்துள்ளது. அதன்படி விமானத்தை தரையிறக்கும் போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றாததும் ஒரு காரணம் என்று கூறியுள்ளது.
மேலும் தொழில்நுட்பக் கோளாறும் ஒரு காரணம் என்று கூறினாலும், விமானியும் ஒரு காரணம் என்பதையும் புறக்கணித்துவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது. தரை இறங்கும் சமயத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றவில்லை. அதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. ஒரு விமானி விமானத்தை தரையிறக்கும் போது நிலை தன்மையற்ற அணுகு முறைகளை தொடர்ந்து பின்பற்றி உள்ளார் என்றும் விமானத் தொழில்நுட்பம் விமானத்தை தரை இறங்குவதற்கு மேலும் ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என எச்சரிக்கை செய்யப்பட்ட போதும், அந்த தொழில்நுட்பத்தை விமானி எடுத்துக் கொள்ளவில்லை.
மேலும் விமான கண்காணிப்பு தொழில்நுட்பம் விமான இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் எடுக்க முடியாமலும் தோல்வி அடைந்தது. விமானி விமானத்தை தரையிறக்க ஒதுக்கப்பட்ட பகுதியைத் தாண்டி ஓடுகளத்தின் பாதி தூரத்தில் தரையிறக்கினார். இது எல்லாமும் விமான விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.