எனது மனைவியை விவாகரத்து செய்ய இதுதான் காரணம்- நடிகர் விஜய் ஓபன் டாக்!!

Photo of author

By Rupa

எனது மனைவியை விவாகரத்து செய்ய இதுதான் காரணம்- நடிகர் விஜய் ஓபன் டாக்!!

Rupa

This is the reason I divorced my wife- Actor Vijay Open Talk!!
யேசுதாஸின் ஒரே மகனான விஜய் யேசுதாஸ் – தர்ஷனா தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் நிலையில் தற்போது அதற்கான காரணத்தை விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார்.
சினிமா சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்பவர்கள் நடிகர்கள் இசையமைப்பாளர்கள் என பலர் தொடர்ச்சியாக விவாகரத்து பெற்று வரும் நிலையில் தற்பொழுது இசையமைப்பாளரான விஜய் யேசுதாஸ் விவாகரத்து காரணம் குறித்து பேசியுள்ளார்.
அவர் , ” ஐ அம் வித் தன்யா வர்மா ” என்கின்ற youtube சேனலில் கொடுத்த பேட்டி ஒன்றில் ” ஒருவர் தான் செய்த செயலுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ளவில்லை எனில் அதற்கான பயன் இல்லாமல் போய்விடும் ” என்று விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார்.
விஜய் யேசுதாஸ் மற்றும் தர்ஷனா தம்பதிகளுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர். மகளுக்கு 15 வயது நடைபெறும் நிலையில் மகளால் வீட்டில் நடப்பது இதுதான் என புரிந்து கொள்ளும் மனநிலை உள்ளது என்றும், தனது மகனுக்கு 9 வயதே ஆன நிலையில் அவனால் எதையும் புரிந்து கொள்ள முடியாது என்றும் விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார்.
மேலும், இருவரும் பரஸ்பர புரிதலுக்கு பின்னரே விவாகரத்து குறித்த முடிவை எடுத்ததாகவும், தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் வேதனையான முடிவு இது என்றும் தெரிவித்துள்ள விஜய் யேசுதாஸ்,  தற்போது வரை தன்னுடைய பெற்றோர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறி உள்ளார்.