மழையினால் இந்த போட்டி பாதிக்கப்பட்டால் இதுதான் முடிவு!! ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிரடி தகவல்!!
இந்தியா பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்றில் மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த போட்டியை அடுத்த நாள் நடத்தப்பட உள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் செப்டம்பர் 10-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கான சூப்பர் 4 சுற்று நடைபெற உள்ளது. இந்த போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது. தற்போது இலங்கையில் மழை பெய்து வருவதால் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டியானது வானிலை காரணமாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் முதல் ஆட்டமானது மழையினால் பாதிக்கப்பட்டதால் முடிவு கிடைக்காமல் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதுபோன்றே தற்போது இரு அணிகளும் மோதும் சூப்பர் 4 சுற்றிலும் மழையினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒரு முடிவு செய்துள்ளது. அதன்படி சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் இதே போட்டியை அதற்கு அடுத்த நாள் நடத்துவதற்கு கிரிக்கெட் கவுன்சில் தற்போது முடிவு செய்துள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதில் கூறி இருப்பதாவது,
செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ள இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 போட்டிக்கு கூடுதலாக ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் மழையின் காரணமாக இந்த போட்டி ஆனது நிறுத்தப்பட்டால் நிறுத்தப்பட்டு இடத்திலிருந்து அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி போட்டி நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இது குறிப்பிடத்தக்க விஷயமாக இலங்கையில் நடைபெறும் மற்ற சூப்பர் 4 போட்டிகள் எதற்கும் கூடுதல் நாள் என்பது கிடையாது.