பாத யாத்திரைக்கு கிடைத்த பலன் இது! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி!!

Photo of author

By Sakthi

பாத யாத்திரைக்கு கிடைத்த பலன் இது! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி!!

Sakthi

பாத யாத்திரைக்கு கிடைத்த பலன் இது! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி!
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சராக டி கே சிவக்குமார் அவர்களும் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அவர்கள் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் “ராகுல் காந்தி அவர்களுடைய பாதயாத்திரைக்கு பலனாக இந்த காங்கிரஸ் கட்சியின் வெற்றி கிடைத்துள்ளது. கர்நாடகாவில் சாமானிய மக்களின் அரசு பதவியேற்றுக் கொண்டுள்ளது. கர்நாடகாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் கூடிய விரைவில் பிற இடங்களிலும் ஏற்படும்” என்று கூறினார்.