நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் நிலைமை இதுதான் – ராகுல் காந்தி!

Photo of author

By Hasini

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் நிலைமை இதுதான் – ராகுல் காந்தி!

Hasini

This is the situation of the Opposition in Parliament - Rahul Gandhi!

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் நிலைமை இதுதான் – ராகுல் காந்தி!

பெகாசஸ் விவாகாரம் காரணமாக பெரும் புள்ளிகளின் செல்போன்கள் ஓட்டுகேட்கப்பட்ட தகவலால் அனைவரும் அதற்கான அவசியம் என்ன என்று கேட்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 300 பேரின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதற்கான பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு மௌனம் காப்பதினால் இன்னும் பல பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

அதனை தொடர்ந்து மழைக்கால கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் நடக்கும் இந்த நேரத்தில் இந்த தொழில்நுட்பம் குறித்து எதிர்கட்சிகள் தினமும் கேள்விகளை கேட்டு வருகின்றன. ஆனால் எதற்கும் இன்னும் பதில்கள் சரியாக கிடைக்கவில்லை. ஒரு வாரமாக எதிர்கட்சிகள் அமளி என்று மட்டுமே செய்திகள் வெளியான நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் இவ்வாறு கூறினார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களை அழிக்கப்படுகின்றன, என்றும் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக பயன்படுத்த பெகாஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? என்ற கேள்வியை தான் நாங்கள் தொடர்ந்து கேட்கிறோம். நாடாளுமன்றத்தில் நாங்கள் ஏதும் இடையூறு ஏற்படுத்தவில்லை. எங்கள் கடமையை மட்டுமே செய்கிறோம்.

இந்நிலையில் பெகாசஸ் மென்பொருள் விவகாரம் குறித்து ஏன் விவாதம் நடைபெறாது என அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட கூடாது என்றால் எங்கே விவாதிப்பது.  இந்தியா போன்ற ஜனநாயக நாட்டின் அமைப்புக்கு எதிராக பெகாசஸ் மென்பொருளை மோடியும், அமித் ஷாவும் ஏன் உபயோகப்படுத்தினார்கள் என்றும் கூறினார்.