பாஜகவை ஜெயிக்க நாம் இதை செய்தே ஆக வேண்டும்! யாரெல்லாம் தயார்! – மம்தா பானர்ஜி!

0
132
We must do this to defeat the BJP! Everyone is ready! - Mamta Banerjee!
We must do this to defeat the BJP! Everyone is ready! - Mamta Banerjee!

பாஜகவை ஜெயிக்க நாம் இதை செய்தே ஆக வேண்டும்! யாரெல்லாம் தயார்! – மம்தா பானர்ஜி!

டெல்லிக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரை சந்தித்து பேசிய பின்னர், நேற்று மாலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மேற்கு வங்காளத்துக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகள் மற்றும் மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்தார்.

இன்று காங்கிரஸ் இடைகால கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த அவர் அந்த சந்திப்பின் போது ராகுல் காந்தியும் உடல் இருந்ததாக தெரிவித்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார். சோனியா காந்தி தேநீர் விருந்துக்கு அழைத்தார். அப்போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார். நாங்கள் பொதுவாக அரசியல் நிலைமை மற்றும் பெகசாஸ் மற்றும் கொரோனாவின் நிலைமை குறித்து விவாதித்தோம். மேலும் எதிர்ப்பின் ஒற்றுமை குறித்தும் விவாதித்தோம்.

இது ஒரு நல்ல மறக்க முடியாத சந்திப்பு. எதிர்காலத்தில் நேர்மறையான முடிவு வெளிவர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பை சோனியா காந்தி விரும்புகிறார். மாநில கட்சிகளை காங்கிரசும் நம்புகிறது, மாநில கட்சிகளும் காங்கிரசை நம்புகிறது.பாஜக வலிமையான கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் வலுவாக அமைந்தால் வரலாற்றை நாம் படைக்கலாம்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை. கருப்பு பணம் உங்களை எதிர்க்கும் நபர்களிடம் மட்டுமே உள்ளது. அரசியலில் பல விஷயங்கள் மாறுகின்றன. அரசியல் புயல் வரும்போது நிலைமையை கையாள கடினமானதாகி விடுகிறது. நரேந்திர மோடி 2019 ல் பிரபலமாக இருந்தார். இன்று அவர்கள் கொரனோ உயிர் இழப்புகள் பற்றிய பதிவுகளை வைத்திருக்கவில்லை. அவர்களின் இறுதி சடங்குகள் மறுக்கப்பட்டன. உடல்கள் கங்கை நதியில் வீசப்பட்டன.

அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் இதை மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள். எனது செல்போன் ஏற்கனவே ஒட்டு கேட்கப்பட்டது. பெகசாஸ் விவகாரம் அனைவரின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் உள்ள உளவு விவகாரத்திற்கு அரசு ஏன் பதில் அளிக்கவில்லை. மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படாவிட்டால், அங்கு விவாதங்கள் நடத்தப்படாமல், அது எங்கே நடக்கும், விவாதங்கள் தேனீர் கடைகளில் நடத்தப்படுவதில்லை.

நாடாளுமன்றத்தில் தான் நடைபெறும் எனவும் கூறினார். அவர் எதிர்க்கட்சியின் முகமாக இருப்பாரா என்ற கேள்விக்கு நான் ஒன்றும் அரசியல் ஜோதிடர் அல்ல. அது நிலைமையைப் பொறுத்தது. இன்று நான் சோனியா காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உடன் சந்திப்பு நடத்துகிறேன். நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு பிறகு எதிர்க்கட்சிகள் சந்திக்கவேண்டும். பாஜகவை தோற்கடித்த அனைவரும் ஒன்றிணைந்து அவசியம் தனியாக நான் ஒன்றும் இல்லை என்றும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதும் அவசியம் என்றும், கூறினார். நான் ஒரு தலைவர் அல்ல நான் ஒரு கேடர். நான் தெருவில் இருந்து வந்த ஒரு நபர் எனவும் அவர் கூறினார்.

Previous articleஅரைகுறை உடையுடன் போட்டோ ஷூட் நடத்தும் பிரபல நடிகை!! இதெல்லாம் ஒரு உடையா என்று கேட்ட ரசிகர்கள்!!
Next articleநாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் நிலைமை இதுதான் – ராகுல் காந்தி!