தளபதி 67 ல் வில்லன் இவர்தான்! படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
191
This is the villain in Thalapathy 67! Official announcement released by the film crew!
This is the villain in Thalapathy 67! Official announcement released by the film crew!

தளபதி 67 ல் வில்லன் இவர்தான்! படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த ஆண்டு தான்  மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களை இயக்கினார்.இந்த படங்கள் இரண்டுமே ஹிட் கொடுத்தது.தற்பொழுது தளபதி 67 படத்தை இயக்கி வருகின்றார்.மேலும் இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரித்து வருகின்றார்.மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என தகவல் வெளியாகி வருகின்றது.

இவர்கள் இருவரும் இணைந்த கூட்டணி மாஸ்டர் என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் சஞ்சய்தத், நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதனை தொடரந்து பூனம் பாஜ்வா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இதுகுறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பூனம் பாஜ்வா ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் இயக்குனர் லோகேஷ் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார்.மேலும் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தான் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் தளபதி 67 படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.இதனை தொடர்ந்து இந்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

அதில் இன்று காலை படக்குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் சஞ்சய் தத் என அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.மேலும் இவர் இந்த படத்தை பற்றி ஒரு லைன் கேட்கும் பொழுதே இந்த படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டார் என அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

author avatar
Parthipan K