சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு தனது கடும் முயற்சியினால் வந்த பிரபலமான நடிகர் தான் ரோபோ ஷங்கர்.
ரோபோ ஷங்கர், தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘மாரி’ திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் வசம் இழுத்தார்.சில நாட்களாகவே நடிகர் தனுஷ் குறித்து பல சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரோபோ ஷங்கர் பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்து சில விஷயங்களை ஓபன் ஆக பேசி உள்ளார்.
அதில், “என் சினிமா வாழ்க்கையில் மாரி திரைப்படம் மிக முக்கியமான ஒன்று”. அவரைப் பொறுத்தவரை ‘என்னைப் போல் சக நடிகர்களை மேலே ஏற்றி அழகு பார்க்கும் ஏணியாக இருக்கிறார்’ என்று அவரது பெருமையை எடுத்துக் கூறினார்.
என்னிடம் மிக உரிமையுடன் பழகும் அவர், ஒரு நடிகர் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகத்தான் அவர் சினிமாத் துறையில் இன்றும் முன்னணியில் உள்ளார்.
‘என்னுடைய வாழ்க்கையில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். இதன் காரணமாகவே என்னால் அவரை மறக்க முடியவில்லை’ என மனம் திறந்தார் நடிகர் ரோபோ ஷங்கர்.