பூஜை அறையில் சாமிக்கு வைக்கும் தண்ணீர் குறைந்தால் வீட்டில் இது தான் நடக்கும்!!  

0
365
This is what happens at home if the water given to the Sami in the pooja room is reduced!!
This is what happens at home if the water given to the Sami in the pooja room is reduced!!

உங்களில் பலருக்கு தினமும் பூஜை செய்து வழிபடக் கூடிய பழக்கம் இருக்கும்.இவ்வாறு வழிபடும் போது எச்சில் படாத தண்ணீர்,பழங்கள் மற்றும் நெய்வேத்தியங்களை படைக்க வேண்டும்.

தண்ணீரை மண் பாத்திரம்,செம்பு அல்லது பித்தளை பாத்திரத்தில் நிரப்பி பூஜை அறையில் வைத்தால் அது நமக்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது ஐதீகம்.இந்த தண்ணீரை வைத்து இறைவனுக்கு பூஜை செய்து தீர்த்தம் போல் அருந்தினால் கோடி நன்மைகள் கிடைக்கும்.

அதேபோல் பூஜை அறையில் வைத்த தண்ணீர் பழையதாகி விட்டால் அதை கால்படாத இடத்தில் ஊற்றிவிட வேண்டும்.மீண்டும் எச்சில் படாத நீரை பாத்திரத்தில் ஊற்றி கடவுளுக்கு முன் வைக்க வேண்டும்.தண்ணீர் என்றால் வருண பகவான் என்று அர்த்தம்.இதன் காரணமாகத் தான் தண்ணீரை பூஜை அறையில் வைத்து வழிபட சொல்கிறார்கள்.இப்படி நாம் வைக்கும் தண்ணீர் தானாக குறைந்தால் அது நம் வீட்டிற்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

இந்த நீரில் இளநீர் தண்ணீர் அல்லது தேங்காய் நீர்,ஏலக்காய், துளசி,பச்சைக் கற்பூரம்,வெட்டிவேர் சேர்த்தால் வீட்டிலுள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.முடிந்தவர்கள் தினமும் இந்நீரை மாற்றலாம்.முடியாதவர்கள் வாரத்திற்கு ஒருமுறை பாத்திரத்தில் உள்ள தண்ணீரை மாற்ற வேண்டும்.இதனால் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

Previous articleபாலில் மஞ்சள் சேர்த்து குடிக்கலாமா?? குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா!!
Next articleஉங்களது சுகர் சட்டென்ன குறைய இதை 1 கிளாஸ் குடியுங்கள்!! இனி மாத்திரை தேவையில்லை!!