80 காலகட்டங்களில் முன்னணி நடிகராக விளங்கியவர் தான் ராமகிருஷ்ணன் என்கின்ற ராம்கி. இவர் 1987 ஆம் ஆண்டு சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார்.
அதன் பின், தமிழ் சினிமாவில் செந்தூர பூவே (1988), மருது பாண்டி (1990), இணைந்த கைகள் (1990), ஆத்மா (1993), கருப்பு ரோஜா (1996) மற்றும் RX 100 (2018) போன்ற வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு திரையுலகிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ராம்கி அவர்கள் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவை பின்வருமாறு :-
எங்க வீட்ல யாருக்கும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அவங்கள பொருத்தவரை சிகரெட் பிடித்தாலே ரொம்ப பெரிய தவறு. என் வீட்ல எல்லாருமே ரொம்ப நல்லா படித்தவர்கள். ஆனால் எனக்கோ படிப்பு சுத்தமாக வரவில்லை.
அதனால் என்னுடைய அப்பா என்னை தண்ணீர் தெளித்து விட்டு விட்டார். அதன்பின் ஏழு வருடங்களுக்கு நான் என்னுடைய வீட்டின் பக்கம் செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், 1987ல் தான் ஹீரோவா நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அப்போ நான் நடித்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. எங்க அப்பா அந்த படத்த பாத்துட்டு நான் தான் இவனோட அப்பா அப்படின்னு சொல்ற அளவுக்கு நான் என்னோட நிலைமையை மாற்றிய பிறகு தான் என்னுடைய வீட்டிற்கு சென்றேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.