இந்த பொருள் ரேசனில் விற்பனை இல்லை!! வெளியான அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அரிசி இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மலிவு விலைகளில் அரசு வழங்கி வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பாக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் கேழ்வரகு வழங்க அரசு ஆணையிட்டது.
2 கிலோ அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்கப்பட வேண்டும். இதன் முதற்கட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவாட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப் பட்டது. தொடர்ந்து இத்திட்டம் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரேசன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் ரேசன் கடைகளில் விற்பனை செய்யும் அளவிற்கு கருப்பட்டி உற்பத்தி இல்லை என பனை தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு முதல் பனை தொழிலாளர்கள் நல வாரியம் நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் 20000 பனை தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பனை மரங்களை வெட்ட கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் ரேசன் கடைகளில் விற்பனை செய்யும் அளவிற்கு கருப்பட்டி உற்பத்தி இல்லை. ஆனால் தனியாக ஸ்டால் வைத்து கருப்பட்டி, பதநீர் மற்றும் பனை பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என பனை தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் தெரிவித்தார்.