ரேஷன் கடைகளில் இனி இந்த பொருள் தடையின்றி கிடைக்கும்! கூட்டுறவு துறை செயலர் வெளியிட்ட தகவல்!
திருவொற்றியூர் தனியார் பள்ளியின் 19 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கூட்டுறவு துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து அவர் கூறுகையில் குருவை சாகுபடி சம்பா உள்ளிட்ட 11.23 லட்சம் மெட்ரிக் டன் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
4,800 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.அரிசி கடத்தல் கணிசமாக குறைந்த நிலையில் மேலும் கட்டுப்படுத்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகின்றது.தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு சில இடங்களில் கோதுமை தட்டுப்பாடு இருக்கின்றது.
இருப்பினும் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை கொள்முதல் செய்ய இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைக்கபப்ட்டுள்ளது.ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளனர். இனி தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இருக்காது என தெரிவித்துள்ளது.மேலும் இந்திய உணவு கழகத்திடம் இருந்து கோதுமை ஒதுக்கீடு கிடைத்தால் தமிழகத்தில் தட்டுப்பாடு நீங்கும் என கூட்டுறவு துறை செயலர் தெரிவித்துள்ளார்.