மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு கட்டாயம் இதனை வழங்க வேண்டும்! பொது சுகாதாரத் துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து காய்ச்சல் குறித்த தகவல்களை தினந்தோறும் பெற வேண்டும்.காய்ச்சல் பாதித்த பகுதிகளில் உடனடியாக தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.மேலும் மழை ,வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்.
மேலும் கொசுப் புழு உற்பத்தியாகும் இடங்களை கண்காணித்து அதனை அடியோடு அகற்றி ,பூச்சுக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். மாசுபடாத ,தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும்.அதனைதொடர்ந்து போதிய அளவு குளோரின் கலந்து விநியோகம் செய்ய வேண்டும்.அந்தந்த பகுதிகளில் கண்காணித்து உடைந்த குடிநீர் குழாய்களை உடனே சரிசெய்ய வேண்டும்.
தமிழகத்தில் மழை பாதித்துள்ள இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்.அனைத்து மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.