இந்த நம்பர் இருந்தா போதும்!! ரேஷன் பொருட்களை பத்தி தெரிஞ்சிக்கலாம்!!
ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அரிசி இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலைகளில் தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் பலவிதமான மாற்றங்களை அரசு கொண்டு வந்துள்ளது. பயோ மெட்ரிக் முறை, ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் மற்றும் பெயர் சேர்த்தல், முகவரி திருத்தம் என அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் சரி செய்து கொள்ளலாம்.
அதே போல் ரேசனில் வாங்கும் பொருட்களுக்கு UPI மூலமாக பணம் செலுத்துவது என பல மாற்றங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. மேலும் பொருட்களின் எடை சம்பந்தப்பட்ட புகார்கள் வருவதால், பொருட்களை பாக்கெட் செய்து வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதே போல் பயோ மெட்ரிக் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. அதனுடன் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய கருவிழிகளை பதிவு செய்து அதன் மூலமாகவும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டம் முதலில் சென்னையில் தொடங்கப்பட்டது. அடுத்ததாக அரியலூர் மற்றும் வேறு சில இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த மாதத்திற்குள் அனைத்து ஊர்களிலும் ஒரு ரேஷன் கடைகளிலாவது இந்த திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக அனைத்து கடைகளிலும் அமல்படுத்தப் படும். இந்நிலையில் தமிழக ரேஷன் கார்டு தொடர்பாக மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது.
நாம் ரேஷன் கடை இன்று திறந்து உள்ளதா என தெரிந்து கொள்ள கூட ரேஷன் கடை வரை சென்றுதான் பார்க்க வேண்டும். ஆனால் இப்போது ரேஷன் கடை திறந்து உள்ளதா என்பதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே அறிந்து கொள்ளலாம். நீங்கள் ரேஷன் கடையில் பதிவு செய்த செல்போன் எண்ணிலிருந்து, PDS 102 என்று டைப் செய்து, 9773904050 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பினால் ரேஷன் கடை இன்றைக்கு செயல் படுகிறதா இல்லையா என தெரிந்து விடும்.
மேலும் அதே எண்ணிற்கு PDS 101 மெசேஜ் அனுப்பினால் இன்றைக்கு ரேசனில் என்ன என்ன பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறது எனவும் தெரிந்து கொள்ளலாம். இனி வீட்டிலிருந்தபடியே அனைத்து தகவல்களையும் செல்போன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.