யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்ய இந்த எண் இருந்தால் போதும்! பயனர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்!

0
194
This number is enough to activate UPI account! Happy news for users!
This number is enough to activate UPI account! Happy news for users!

யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்ய இந்த எண் இருந்தால் போதும்! பயனர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்!

பஞ்சாப் நேஷனல் பேங்க் என்பது பொதுத்துறை வங்கியாக செயல்படுகிறது.முன்பாக யுபிஐ செயலியில் ஆக்டிவேட் செய்ய டெபிட் கார்டுடன் அதற்குரிய செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும் ஓடிபி எண்ணும் தேவை.மேலும் இந்த திட்டம் டெபிட் கார்டு கையில் வைத்திருக்காத பல வாடிக்கையாளருக்கு யுபிஐ சேவையை பயன்படுத்த தடையாக இருந்தது.

இந்நிலையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில் யுபிஐ பதிவு செய்வதற்கு டெபிட் கார்டு தேவையில்லை.யுபிஐ அலையில் இணைய ஆதார் கார்டு ஸ்கேன் செய்தால் போதும் என தெரிவித்துள்ளார்.

ஆதார் ஓடிபி மூலம் யுபிஐ ரகசிய எண் அமைக்க அல்லது மாற்றியமைப்பதற்கு சிறந்த வழிமுறையாகும்.மேலும் டெபிட் கார்டு இல்லாத மற்றும் யுபிஐ மூலம் பணம் செலுத்தி பயன்பெற நினைக்கும் பயனர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என தேசிய கொடுப்பனவு கழகம் தன்னுடைய இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதன் வழிமுறை:

முதலில் செயலியில் புதிய ரகசிய எண் என்பதை தேர்வு செய்ய வேண்டும்,அதனையடுத்து ஆதார் அடிப்படையிலான சரிப்பார்ப்பை தேர்வு செய்ய வேண்டும்,ஆதார் அட்டையின் கடைசி ஆறு இழக்க எண்களை அதில் பதிவு செய்ய வேண்டும்,அதன்பிறகு செல்போன் எண்ணிற்கு வந்த ஓடிபி எண்ணை பதிவிடுங்கள் இந்த செயல்முறை அனைத்தும் முடிவடைந்த நிலையில் சரிபார்த்த பின் புதிய ரகசிய எண்ணை பதிவிட்டு உறுதி செய்ய வேண்டும்.

மேலும் இதற்கு செல்போன் எண்ணை ஆதார் எண்ணுடன் வங்கி கணக்குடன் இணைத்திருப்பது முக்கியமான ஒன்றாகும்.வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணும் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணும் ஒன்றாக இருப்பது அவசியம்!

Previous articleஒயின்ஷாப் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.. ஆட்சியரின் அடாவடியை கண்டித்து தீர்மானம் – பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!!
Next articleமுத்தரப்பு கிரிக்கெட் தொடர்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!