எஸ்பிஐ வங்கியில் நாளையுடன் இந்த சலுகை முடிவடைகிறது! வாடிக்கையாளர்க்ளுக்கு இனி வழங்கப்படமாட்டாது!
ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது.இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறுகிறது.மேலும் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு சலுகைகளை வழங்கி வருகிறது.வாகன கடன் மட்டுமின்றி வீட்டு கடன்களையும் வழங்கி வருகின்றது.மேலும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள சிறப்பு வீட்டுக் கடன் சலுகை நாளையுடன் முடிவடைகிறது.
இந்த எஸ்பிஐ வங்கியில் திருமணங்கள்,விடுமுறைகள்,கல்லுரிச் செலவுகள் மற்றும் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் மற்றும் வேறு ஏதேனும் எதிர்பாராத நிதித் தேவைகள் எதுவாக இருந்தாலும் இங்கும் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .
அதனை தொடர்ந்து இதன் ஒரு பகுதியாக வீட்டுக் கடன் வட்டி விகிதம் 30 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.இந்த சலுகையில் வட்டி விகிதங்களை சாதாரண வட்டி விகிதங்களை விட குறைவாக உள்ளது.நல்ல CIBIL மதிப்பெண் பெற்றவர்களுக்கு இந்த சலுகையில் 15 முதல் 30 அடிப்படை புள்ளிகள் வரை தள்ளுபடி வழங்கப்படும்.இந்நிலையில் கிரெடிட் ஸ்கோர் 700 க்கு கீழ் உள்ளவர்களுக்கு வட்டி விகிதங்களில் குறைப்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.