உங்களுளால் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த முடியவில்லையா.அப்போ நீங்கள் கலவைப்படாமல் இங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)சின்ன வெங்காயம் – 10
2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
சின்ன வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறாக்கவும்.
அடுத்து கிண்ணம் ஒன்றில் இந்த வெங்காயச் சாறை பிழிந்து வைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணையை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.
அடுத்து கற்றாழை மடலில் இருந்து ஜெல் எடுத்து அதை வெங்காயச்சாறுடன் சேர்க்க வேண்டும்.இதை நன்றாக மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதனை தலைக்கு தடவ வேண்டும்.முடியின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு மேல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.
இதுபோன்று செய்து வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.நீண்ட வருடங்களாக தலைமுடி உதிர்வு பாதிப்பை அனுபவித்து வருபவர்கள் இந்த வெங்காயச் சாறை தலைக்கு பயன்படுத்தி பலனடையலாம்.
அதேபோல் வெங்காயத்தை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி ஆறவைத்து தலைக்கு தடவி வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.அதேபோல் தேங்காய் எண்ணெயில் சிறிதளவு வெந்தயம் போட்டு ஊறவைத்து அதை தலை முடிகளுக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.