ஒரே வாரத்தில் முடி உதிர்வு நின்று முடி காடு போல கருகருன்னு வளர இந்த ஒரு Hair Pack போதும்!!

Photo of author

By CineDesk

ஒரே வாரத்தில் முடி உதிர்வு நின்று முடி காடு போல கருகருன்னு வளர இந்த ஒரு Hair Pack போதும்!!

CineDesk

ஒரே வாரத்தில் முடி உதிர்வு நின்று முடி காடு போல கருகருன்னு வளர இந்த ஒரு Hair Pack போதும்!!

பெண்களில் பல பேருக்கு இருக்கக்கூடிய ஒரு தீரா பிரச்சனை தான் முடி உதிர்வு, முடி உடைதல், முடி வெடித்து போதல், முடி சொரசொரப்பாக மாறுதல். இதற்கான தீர்வை வீட்டிலேயே செய்யலாம். அது எவ்வாறு என்பதை இங்கு பார்ப்போம்.

செய்முறை:
இந்த ரெமிடியை செய்வதற்கு முதலில் சாதம் வேக வைத்து வடித்த கஞ்சித் தண்ணியை எடுத்துக் கொள்ளவும். இந்த சாதம் வேக வைத்து எடுத்த கஞ்சி தண்ணி இல்லை என்றால் அரிசி ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தண்ணீரை நாம் பயன்படுத்துவதால் முடி வளர்ச்சியை நன்கு தூண்ட முடியும்.

இந்த தண்ணீருடன் இரண்டு தேக்கரண்டி அளவு கருஞ்சீரகத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கருஞ்சீரகம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த கருஞ்சீரகம் இளநரையை மறைத்து முடி உதிர்வை நிறுத்தி முடியின் வேர்களுக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுக்கும்.

இதனுடன் சிறிதளவு செம்பருத்தி இலை பவுடரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கஞ்சித்தண்ணி கருஞ்சீரகம் மற்றும் செம்பருத்தி இலை பவுடர் மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து விட்டு 30 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட வேண்டும். 30 நிமிடங்களுக்கு பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இவ்வாறு அரைத்து எடுத்த பேஸ்டில் தேவைப்பட்டால் வைட்டமின் ஈ ஆயில் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் ஆலிவ் ஆயில் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றையும் ஒரு இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

இதை தலையில் தடவுவதற்கு முன்பாக சிறிதளவு தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்துக் கொள்ளவும். இப்போது நாம் தயார் செய்து வைத்திருக்கும் ரெமிடியை முடியின் முழுவதிலும் தேய்த்து 20 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு பிறகு எந்த ஒரு ஷாம்பூவும் பயன்படுத்தாமல் வெறும் தண்ணீரில் முடியை அலச வேண்டும்.

இதில் நாம் சேர்த்திருக்க கூடிய செம்பருத்தி பவுடர் ஆனது நம் முடிக்கு நல்ல ஒரு ஷாம்பு ஆகவும் கண்டிஷனராகவும் செயல்படும். இதை வாரத்தில் இரண்டு முறை செய்து வரவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் முடி உதிர்வு நின்று முடி வளர்ச்சி அடைவது நமக்கே தெரியும்.

இதை பயன்படுத்திய அடுத்த நாள் ஷாம்பு பயன்படுத்தலாம் ஆனால் இதை பயன்படுத்துகிற அன்றைக்கு ஷாம்பு உபயோகப்படுத்தக் கூடாது. இந்த ரெமிடியை தொடர்ந்து பயன்படுத்துவதால் முடி உதிர்வு நின்று வழுக்கை விழுந்த இடங்களில் கூட முடி வளரும். மேலும் முடி நன்கு பளபளப்பாக பொலிவுடன் கருமையாக காணப்படும்.