பருக்கள் கரும்புள்ளிகள் உள்ளிட்ட அனைத்து சரும பிரச்சனைகளும் இந்த ஒரு வீட்டு வைத்தியம் போதுமே!!

Photo of author

By Gayathri

பெண்கள் தங்களுடைய முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அதீத ஆர்வம் காட்டுகிறாரகள்.அவர்களுக்கு உதவும் வகையில் பருக்கள்,கரும்புள்ளிகள் உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள் இங்கு தரப்பட்டுள்ளது.

முகப்பருக்கள் மறைய வீட்டு வைத்தியம்

1)சந்தனம்
2)மிளகு
3)ஜாதிக்காய்
4)வேப்பிலை

இரண்டு மிளகு மற்றும் சிறிதளவு ஜாதிக்காய் துண்டுகளை உரலில் போட்டு இடித்து பொடி செய்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடி மற்றும் ஒரு கொத்து வேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.அரைக்கும் பொழுது சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.இந்த விழுதை முகத்தில் காணப்படும் பருக்கள் மீது பூசி நன்கு உலரவிடுங்கள்.

பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்யுங்கள்.இப்படி செய்து வந்தால் முகப்பருக்கள் அனைத்தும் சில நாட்களில் மறைந்துவிடும்.

கருவளையம் நீங்க வீட்டு வைத்தியம்

1)வெள்ளரிக்காய்
2)விளக்கெண்ணெய்

ஒரு பிஞ்சு வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.இதை கண்களை சுற்றி அப்ளை செய்து சில மணி நேரத்திற்கு அப்டியே விடுங்கள்.

பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கண்களை சுற்றியும் துடைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் சிறிது விளக்கெண்ணெய் எடுத்து கண்களை சுற்றி அப்ளை செய்யவும்.இப்படி செய்து வந்தால் கண் கருவளையம் முழுமையாக நீங்கிவிடும்.

கருந்திட்டுகள் நீங்க வீட்டு வைத்தியம்

1)பாசிப்பயறு
2)தயிர்

இரண்டு தேக்கரண்டி அளவு பாசிப்பயறு எடுத்து வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை ஆறவிட்டு ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளுங்கள்.பிறகு இதில் சிறிதளவு தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து முகத்தில் அப்ளை செய்து உலரவிடுங்கள்.இப்படி செய்து வந்தால் கருந்திட்டுகள் அனைத்தும் நீங்கிவிடும்.