குளிர்கால குதிகால் வெடிப்பு 7 தினங்களில் குணமாக உதவும் இந்த ஒரு பொருள்!!

Photo of author

By Gayathri

மழைக்காலம் முடிந்து தற்பொழுது பனிக்காலம் தொடங்கிவிட்டது.டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கும்.இந்த மாதங்களில் அனைவருக்கும் சருமம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

தோல் வறட்சி,சருமம் வெடிப்பு,குதிகால் வெடிப்பு,வறண்ட உதடு போன்ற பல பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.குறிப்பாக குதிகால் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டு அதிக வலி மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.

அதேபோல் கால் விரல்களில் சேற்றுப்புண்கள் ஏற்பட்டு அதிக தொந்தரவுகளை காண நேரிடும்.கால் வெடிப்பு,சேற்றுப்புண் போன்ற பாதிப்புகள் இருந்தால் அவை எளிதில் குணமாகவும்,வராமல் இருக்கவும் கீழே கண்ட குறிப்புகளை பின்பற்றலாம்.

1)தேன் – ஒரு ஸ்பூன்
2)தண்ணீர் – ஒரு பக்கெட்

இரவு நேரத்தில் செய்ய வேண்டிய குறிப்பு இவை.ஒரு அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கால்களை வைத்து 10 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.

பின்னர் கால்களை துடைத்துவிட்டு உறங்கவும்.இப்படி தினமும் செய்து வந்தாலே கால்களில் வெடிப்பு வராமல் இருக்கும்.

1)கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இதை பாத வெடிப்புகளில் அப்ளை செய்து இரவு முழுவதும் காயவிடவும்.

மறுநாள் வெது வெதுப்பான நீரில் கால்களை கழுவி சுத்தம் செய்யவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் கால் வெடிப்பு முழுமையாக சரியாகிவிடும்.