இந்த கட்சி தான் வெற்றி! அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்துக் கொண்டுள்ளார்களாம்!
தமிழக சட்டமன்ற தேர்தலானது நேற்று நடந்து முடிந்தது.மக்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை அவர்களுக்கு விருப்பமுள்ள வேட்பாளர்களுக்கு செலுத்தி வந்தனர்.இந்த தேர்தல் பெரும் இரு கட்சியின் தலைவர்கள் இன்றி முதல் முறையாக நடக்கிறது.பரப்புரை ஆரம்பித்ததிலிருந்தே அனைத்து கட்சிகளும் பல காரியங்களில் கையும் களவுமாக சிக்கினார்கள்.ஒரு வழியாக நேற்று வாக்குபதிவு நடைபெற்று முடிந்த நிலையில்,திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஸ்டாலின் அதில் தெரிவித்தது,தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் தன்மை உணர்ந்து போரிட்ட திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணிக்கட்சியின் தோழர்கள் அனைவருக்கும் நன்றியை தெறிவித்து கொள்கிறேன் என்றார்.அதன்பின்,அதிமுக மற்று பாஜக வின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் காவலர்கள் பலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பராபட்சமாய் நடந்தது என அனைத்தும் சாமாளித்து போராடி கூட்டணி கட்சிகள் ஆற்றிய பணிகள் அனத்தும் பாராட்டிற்குரியவை.
கொரோனா அச்சுறுத்தல் காலத்திலும் ஜனநாயக திருவிழாவில் பேர்ரார்வத்துடன் கலந்துக்கொண்ட மக்களுக்கும் மற்றும் இந்த அச்சுறுத்தல் காலத்திலும் வாக்குமய்யத்தில் பணியாற்றிய அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,காவலர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.அதனையடுத்து ஆவடி,விருதுநகர்,திருவையாறு நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் உதயசூரியனுக்கு அளித்த வாக்கு தாமரைக்கு விழுந்தது,மதுரவாயில் வாக்குச்சாவடியில் பொதுமக்களை பார்த்து ஜாதியை குறிப்பிட்டு அமைச்சர் பெஞ்சமின் மிரட்டல்,தொண்டமுத்தூர் திமுக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த எஸ்.பி வேலுமணி என அதிமுகவினர் செய்த அராஜகங்களை ஸ்டாலின் அந்த அரிக்கையில் புட்டு உடைத்தார்.
இவைகள் அனைத்தயும் சமாளித்து துணிச்சலுடன் இந்த தேர்தலில் பணியற்றியிருப்பது நமது ஜனநாயகத்தில் கூட்டணிக் கட்சியின் நம்பிக்கைக்கு பொருத்தமாக உள்ளது என்றார்.வாக்கு பதிவு முடிந்து அனைத்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்ல பட்ட நிலையிலும்,நான் நேற்று வேண்டுகோள் விடுத்தது போல இனி தான் முக்கிய தேர்தல் பணி இருக்கிறது.அதனால் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சிகள் நாம் ஒன்றாக சேர்ந்து மின்னணு வாக்கு பதிவு உள்ள பாதுகாப்பு மையத்தை நாம் மும்மரமாக கண்காணிக்க வேண்டும்.
அதன்பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை மின்னணு வாக்கு பதிவு உள்ள மையங்களை “டர்ன் டியூட்டி” அடிப்படையில் தங்களுக்குள் ஒதுக்கீடு செய்துக்கொண்டு கழகத்தினரும்,கூட்டணி கட்சியினரும் இரவும் பகலும் தொய்வின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.ஏதேனும் குளறுபடிகள் மின்னணு வாக்கு பதிவு இருக்கும் மையத்தில் நடந்தால் உடனடியாக கட்சி தலைமையிடம் தெரிவிக்கும் படி கேட்டுக்கொண்டார்.அதன்பின் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நாள் வரை,நமக்கான பொறுப்பும் கடமையும் அதிகமாக உள்ளது என்றார்.