இந்த இலை செய்யும் அதிசயம்! பெண்களின் அனைத்து பிரச்சனையும் தீரும்!

0
229
#image_title

பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். பெண்களுக்கென்று வரமாக கிடைத்த மரம் என்று கல்யாண முருங்கையை கூறலாம். பெண்களின் ஹார்மோன் சுரப்பிகளை சரியாக வேலை செய்ய வைத்து சீராக்க உதவுகிறது.

மேலும் இந்த இலையை மாதந்தோறும் சமைத்துக் பெண்கள் உண்டு வந்தால், பெண்களுக்கு இருக்க கூடிய மாதவிடாய், கருப்பை பிரச்சனை என எதுவும் பெண்களை அண்டாது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த கல்யாண முருங்கை.

இப்பொழுது அதனுடைய பயன்களை பார்ப்போமா!

 

1. கல்யாண முருங்கை பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை பிரச்சனையிலிருந்து சரிசெய்யும். கருச்சிதைவில் இருந்து சிசுவை காப்பாற்றும். பெண் மலட்டு தன்மையை நீக்கும்.

2. பெண்கள் கல்யாண முருங்கையை சாப்பிட்டு வரும்பொழுது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்கும்.

3. கல்யாண முருங்கை இலைச் சாற்றை பெண்கள் தினமும் குடித்து வரும் பொழுது குழந்தை இல்லாத பெண்களின் குறை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவார்கள். மேலும் இந்த இலைச் சாற்றை குடித்தால், பெண்களின் அந்தரங்க பகுதியில் ஏற்படும் நீர்த்தாரையில் எரிச்சல் சரியாகும், உடல் பருமனை குறைக்கும்.

4. பால் ஊட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்க பெரிதும் உதவுகிறது.

5. இந்த கல்யாண முருங்கை சிறுநீரக பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது. மேலும் பித்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

6. பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களின் ஆண்மை அதிகரிக்கும். கல்யாண முருங்கை இலையுடன் உளுந்து, கசகசா,மாதுளம்பழச் சாறு அனைத்தையும் அரைத்துச் சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாம்பத்யத்திய உறவில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு உறவில் ஆர்வம் ஏற்படும்.

7. காய்ச்சலை குணப்படுத்தி உடலை வலுவாக்கும்.

8. ரத்தசோகை உள்ளவர்கள் கல்யாண முருங்கை இலை, மிளகு,பூண்டு, முருங்கை கீரை இவற்றை சூப் போல குடித்தால் இரத்தம் ஊரும்.

9. வெறும் கல்யாண முருங்கை இலையுடன் மிளகு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மழை காலங்களில் வரும் சளி காய்ச்சல் குணமாகும்.

10. கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து உடலில் சேர்த்து பூசி குளித்து வர தோல் பிரச்சனை, சொறி,சிரங்கு குணமாகும்.

11. வெள்ளைப்படுதல் குணமாக கல்யான முருங்கை இலையுடன் சிறிது ஊற வைத்த வெந்தயம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல், வெட்டை நோய் குணமாகும்.

12. இந்த இலையை வதக்கி வாதம் உள்ள இடத்தில் கட்டினால் வாதம் குறையும்.

இப்படி ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியுள்ள இந்த இலையை கண்டால் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Previous articleவீசிங் பிரச்சனை இருக்கா! இந்த ஒரு இலையை இப்படி செஞ்சிப்பாருங்க!
Next article21 நாட்கள் தொடர்ந்து குடிங்க! கண்ணாடிய தூக்கி போட்ருவிங்க!