காந்தி ஜெயந்தியை யொட்டி இத்திட்டத்தை தீவிர படுத்த வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை!!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டார் பக்கத்தில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது பொது இடங்களில் புகை புகைப்பிடிப்பது தடை என்ற சட்டத்தை இதே காந்தி ஜெயந்தி நாளில் அமல்படுத்தப்பட்டது.ஆனால் தற்பொழுது இது தீவிர செயல்பாட்டில் இல்லை. இதனால் புகைப்பிடிப்பவர்கள் மட்டும் இன்றி அதனை சுவாசிப்பவர்களுக்கு பெரும் பாதிப்பை அடைகின்றனர் என்ற வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம், 14 ஆண்டுகளுக்கு முன் இதே காந்தி பிறந்த நாளில், நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, நீண்ட அரசியல், சட்டப் போராட்டத்திற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது. அது ஒரு வரலாற்று நிகழ்வு.
இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம், 14 ஆண்டுகளுக்கு முன் இதே காந்தி பிறந்த நாளில், நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, நீண்ட அரசியல், சட்டப் போராட்டத்திற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது. அது ஒரு வரலாற்று நிகழ்வு!(1/4)#NoSmoking
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 2, 2022
புகைத்தடை சட்டம் இன்று வரை ஏட்டில் இருந்தாலும் நடைமுறையில் இல்லை என்பது தான் வேதனையான உண்மை. பொது இடங்களில் ஏராளமானோர் எந்த தடையும், தயக்கமும் இன்றி புகைப்பிடிக்கின்றனர். அதனால், பெண்களும், குழந்தைகளும் முகம் சுழிப்பதையும் காண முடிகிறது.
புகைத்தடை சட்டம் இன்று வரை ஏட்டில் இருந்தாலும் நடைமுறையில் இல்லை என்பது தான் வேதனையான உண்மை. பொது இடங்களில் ஏராளமானோர் எந்த தடையும், தயக்கமும் இன்றி புகைப்பிடிக்கின்றனர். அதனால், பெண்களும், குழந்தைகளும் முகம் சுழிப்பதையும் காண முடிகிறது!(2/4)#BanOnPublicSmoking
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 2, 2022
இவ்வாறு இருக்கையில் மத்திய மற்றும் மாநில அரசு பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடை சட்டத்தை தீவிர படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.