இன்று சேலம்,ஆத்தூர், அம்மாபாளையம் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த பயிலரங்கத்தில் தொடர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர் அதில் அதிகமாக பெண்கள் கூட்டம் காண முடிகிறது. இந்த பயிலரங்கத்தில் மாநாட்டில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன? புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவிக்கப்பட்ட கட்டளைகள் என்ன என்பது குறித்து கூறப்படுவதே இந்த பயிலரங்கம்.
இந்த மாதம் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த காரணத்தால் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட இடம் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது இதனால் பலரும் இந்த மாநாடு குறிப்பிட்ட தேதியில் நடைபெறுமா? அல்லது தள்ளி போகுமா? என்று கருத்துக்கள் இணையதளங்களில் வெளியாகின.
இதனை தொடர்ந்து சேலத்தில் இன்று நடைபெற்ற பயிலரங்கத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இதற்கு முன் நாம் ரசிகர் மன்றமாக இருந்தோம் உன்னால் முடியும் என்ற ரசிகர் மன்ற கொடி கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. ஆனால் இப்போது நாம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை தொடங்கி அரசியல் களத்தில் உள்ளோம். இன்று தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக கட்சி கொடி பறந்து கொண்டிருக்கிறது. பல நாட்களாக கூற வேண்டும் என நினைத்த ஒரு விஷயத்தை இப்போது கூறுகிறேன். நம் தொண்டர்கள் அப்பா அம்மா தவிர யார் காலிலும் விழ கூடாது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பயிலரங்கம் நடத்த வேண்டும் என கூறினேன் உடனே மண்டபத்தில் கூட்டம் சேர்த்தார்கள். அதே போல் வருகின்ற வழி முழுவதும் கோடி மற்றும் போஸ்டர் வைக்கப்பட்டிருந்தது. மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, அதில் போஸ்டரில் நிரந்தர பொது செயலாளர் என குறிப்பிட்டிருந்தது, எனக்கு பொது செயலாளர் பதவி அளித்தது தலைவர் விஜய் நான் நிரந்தரமா? இல்லையா? என்பது குறித்து அவர்தான் முடிவெடுப்பார்.நான் 5 ஆண்டுகளுக்கு முன் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். ஆனால் அப்போதும் நான் தளபதி விஜய்யின் ரசிகன் தான் அந்த பதவி தான் எனக்கு நிரந்தரம் என நான் சொன்னேன் இப்போதும் அதுதான் என் நிலைப்பாடு.
ஒரு மாநாட்டை விஜய் நடத்த திட்டமிட்ட பிறகு அதை முறையாகவும், அதற்கான தெளிவான ஒரு திட்டத்தை வகுத்துள்ளார். மற்ற மாநாடுகளை போல் இல்லாமல் அவரிடம் ஒரு தெளிவு இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இந்த மாநாட்டில் தான் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொள்கைகளும், கொடியின் விளக்கத்தை பற்றியும் விவரிக்க உள்ளார் என தவெக பொது செயலாளர் கூறியுள்ளார்.