ஆசிரியர்கள் பணி நியமனத்தின் போது இது கட்டாயம் இருக்க வேண்டும்!! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!

0
83
This should be mandatory during recruitment of teachers!! High Court Warning to Tamil Nadu Govt!!

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கு வரவேண்டும் என்றல் அவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தகுதித்தேர்வு கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக அரசு அமுல்படுத்தியது. இந்த தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் அமர்த்தபடுவர். மேலும் இந்த சட்டத்தில் ஓரு திருத்தத்தை கொண்டுவந்தது 2018ஆம் ஆண்டு தமிழக அரசு. அதில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடையில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வு பெற்றவர்களை பணியில் நியமித்தனர்.

இந்த அரசாணையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் தனி நீதிபதி இந்த அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என அவர் அறிவுறுத்தினர். இதனிடையே உயர்நீதிமன்ற தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருநீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறும் போது அண்மைகாலமாக குற்ற வழக்குகளில் சிக்கும் ஆசிரியர்கள் குறித்து பல செய்திகள் செய்தித்தாள்களில் வருகின்றன. அதனால், ஆசிரியர்கள் நியமனத்தின்போது அவர்களது குற்றப்பின்னணி குறித்து போலீஸ் மூலம் ஏன் விசாரிக்கக்கூடாது? போலீஸ் வேலைக்கு சேர்பவர்கள், வக்கீலாக பார் கவுன்சிலில் பதிவு செய்பவர்களின் குற்றப் பின்னணி குறித்து போலீசார் மூலம் விசாரிக்கிறார்கள். இப்படியான சூழலில் ஆசிரியர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். இதுகுறித்து அரசு ஏன் ஒரு முடிவு எடுக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்கள்.

மேலும் அரசின் கூடுதல் வழக்குரைஞர் ஜெனரல் R. நீலகண்டன் ஆஜர்னார். பின்பு அவர் கூறுகையில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்யும் போது, அதில் குற்ற வழக்கு இல்லை என குறிப்பிட வேண்டும். மேலும் அந்த ஆவணத்தையும் இணைக்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த கருத்துகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவதாக அரசின் கூடுதல் வழக்குரைநர் தெரிவித்தார். இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மேல்முறையீடு வழக்கு அரசு தரப்பில் பாதி மனு தாக்கல் செயவேண்டும். எந்த விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

Previous article9 ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர்களுக்கு மாதம் ரூ 1000!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
Next articleதாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் டிரம்ப் தான் காரணம்!! லெபனானில் பொழியும் குண்டு மழை!!