100 நாள் வேலை திட்டத்தில் இந்த பணிக்கு முன்னுரிமை! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Photo of author

By Parthipan K

100 நாள் வேலை திட்டத்தில் இந்த பணிக்கு முன்னுரிமை! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

மத்திய அரசின் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் கிராம புற மக்களுக்கு ஆண்டு வரும் 100 நாட்கள் வேலை வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின் அடிப்படையில் ஊரகப்பகுதிகளில் ஊராட்சி மன்றங்கள் வழியாக இந்த பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த திட்டத்தின் படி குறிப்பிட்ட அளவிலான பணிகளை முடிக்கும் நிலையில் ஒரு நாளைக்கு 214 ஊதியம் வழங்கப்படுகின்றது.

மேலும் இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தேர்வு செய்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் வாய்க்கால்களை தூர் வாருவதற்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆறுகளில் இருந்து வாய்க்கால் வழியாகவே பாசன நீர் விவசாய வயல்களுக்கு கொண்டு செல்லப்படும்.

அதனால் தடையின்றி பாசனம் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வாரும் இப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. வாய்க்கால்களை தூர் வாரும் பொழுது  குறிப்பிட்ட இடைவெளி இரண்டு அடி ஆழத்திற்கு, 6 அடி  நீளம், 2.5 அடி அகலம் என்ற அளவில் நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகள் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெரும்புகலூர் அம்மையப்பன், வண்டம்பாலை உள்ளிட்ட 44 ஊராட்சிகளில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் படி இரண்டாம் பாளையம் ஊராட்சி திருப்பள்ளி முக்கூடல் கிராமத்தில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.