சீனாவில் பயங்கர சவாலான இந்த விஷயம்! வேகமாக பரவும் இதனாலா?

Photo of author

By Hasini

சீனாவில் பயங்கர சவாலான இந்த விஷயம்! வேகமாக பரவும் இதனாலா?

Hasini

This thing is terribly challenging in China! Is it spreading fast?

சீனாவில் பயங்கர சவாலான இந்த விஷயம்! வேகமாக பரவும் இதனாலா?

இந்தியாவில் கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா தாக்கம் பரவிக் கொண்டே இருக்கிறது. இன்னமும் குறைந்தபாடில்லை. அதற்குள் இரண்டாம் அலை முடிந்து தற்போது மூன்றாம் நிலையை எட்டும் தருணத்தில் உள்ளோம். அதற்கு காரணம் சீனா தான் என்றாலும், அதன் பின் இந்தியாவில் இருந்து  கண்டறியப்பட்டது உருமாறிய வைரஸ் என்று அறிவியலாளர்கள் பெயர் வைத்தார்கள். இது கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவும் என்றும் தெரிவித்தனர்.

தற்போது வரை உலகின் 135 நாடுகளுக்கும் பரவியுள்ளது. உலகுக்குகே கொரோனா வைரசை வழங்கிய சீனாவுக்கு அதாவது அங்கிருந்து வந்த நிலையில், கொரோனா வைரஸை காட்டிலும், இந்த வைரஸ் மிக வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் ஆனது சீனாவிற்கு பெரும் சவாலாகவும், தலைவலியாகவும் மாறி உள்ளது. இந்த வைரஸ் பரவல் சீனாவை மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றன.

அவற்றின் தலைவர்கள் புதிய கட்டுப்பாடுகளை எவ்வாறு விதிக்கலாம் என்றும் யோசிக்க வைத்துள்ளன. சீனாவில் இந்த டெல்டா வைரஸ் பரவலில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக அங்குள்ள அதிபர் ஜின்பிங் நிர்வாகம் தீவிரமாக போராடி வருகிறது. அங்கு ஊரடங்கு போடும் நடவடிக்கைகளையும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி புதுப்பித்து வருகிறது.15 லட்சம் மக்களைக் கொண்டுள்ள நகரங்களுக்கு செல்வது போன்றவை துண்டிக்கப்பட்டுள்ளன.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில பகுதிகளில் மக்கள் பெருந்திரளாக பரிசோதனை செய்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றி ஊகான் நகரில் கொரோனா உருவானபோது பிரபலமான ஷாங்காய் நகரில் மருத்துவர் ஜாங் வென்ஹாங் சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியிருக்கிறார். சமீபத்திய வைரஸ்களின் தொற்று காரணமாக வைரஸ் இன்னும் போய் விடவில்லை என்று காட்டுகின்றன. ஆனால் இதை தடுக்க சீனாவின் உத்திகள் மாறலாம். இந்த வைரசுடன் இருப்பதற்கு உலகம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும், குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போதைய வைரஸ் பற்றி கூறும் போது கடுமையான வெற்றிக்கான போராட்டத்தில் இருக்கும் போது இந்த வைரஸ் பரவல் கடுமையான சவால்களை சீனாவுக்கு ஏற்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.