சிவாஜியை தூக்கி சாப்பிட்ட வில்லன்! இத்தனை வேடத்தில் இதுவரை யாரும் நடிக்கவில்லை!

0
250
#image_title

சிவாஜியின் நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் சிவாஜி நடித்திருப்பார் என்று அந்த காலத்தில் மிகவும் பெருமையாக பேசப்பட்டது. ஆனால் இந்த படத்திற்கு முன்னரே பதினோரு வேடங்களில் ஒருத்தர் நடித்துள்ளார் அதுவும் வில்லன் என்றால் நம்ப முடிகிறதா?

 

இன்றைய காலத்தில் நம் ஒரு புத்தகத்தையோ ஒரு காவியத்தையோ படமாக எடுக்க தயங்குகிறோம். ஆனால் அன்றைய காலத்தில் ஒரு புராண கதைகளையும் ஒரு காவியத்தையும் படமாக எடுப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். அப்படி திகம்பர சாமியார் என்று துப்பறியும் ஒரு படம் உருவாக்கப்பட்டது.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவர் எழுதிய நாவல், சினிமாவாக, தெளிவான திரைக்கதையாக மாற்றப்பட்டது. அதுதான் ‘திகம்பர சாமியார்’.

 

 

அந்தக் காலத்திலேயே 11 வேடங்கள்; உளவியல் கதை; துப்பறியும் கதை! ஹீரோவாக அசத்திய நம்பியார்; ‘திகம்பர சாமியார்’ வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.

 

 

‘திகம்பர சாமியார்’. ஏதோ… இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு வந்த படம் என்று நினைத்துவிடாதீர்கள். ‘திகம்பர சாமியார்’ படம் வெளியாகி 70 வருடங்களாகின்றன

 

 

மாடர்ன் தியேட்டர்ஸ், அந்தக்காலத்தில் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. மக்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டும் என்று நினைப்பில் படம் எடுக்கும் ஒரே ஒரு தயாரிப்பு நிறுவனம். ‘திகம்பர சாமியார்’ படத்தையும் மாடர்ன் தியேட்டர்ஸ்தான் தயாரித்தது.

 

விஞ்ஞானம், உளவியல், க்ரைம், சஸ்பென்ஸ், த்ரில்லர் என்று பல விஷயங்களை அப்போதெல்லாம் எடுக்கமாட்டார்கள். ஆனால் இவை அனைத்தையும் கொண்டு அந்தக் காலத்திலேயே படமாக எடுத்தார்கள். ‘திகம்பர சாமியார்’ படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிக்க, டி.ஆர்.சுந்தரம் இயக்கினார். மருதகாசி, கா.மு.ஷெரீப், கே.பி.காமாட்சி, தஞ்சை ராமையா தாஸ், கண்ணதாசன் முதலானோர் பாடல்களை எழுதினார்கள். படத்தில் லலிதா, பத்மினி, ராகினி சகோதரர்கள் ஆடுகிற ஆட்டமும் பாடலும் நன்கு பிரபலம் அடைந்தது.

 

இந்த படத்தில் 11 வருடங்களில் நடித்துள்ளார் நம்பியார். இதில் இவருக்கு ஒரு துப்பறிவும் வேடத்தில் வந்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்.

இப்படி நம்பியாரை வில்லனாகவே பார்த்த நாம். ஒரு ஹீரோவாக பார்க்க மறந்த படம் தான் இந்த திகம்பரசாமியார்.

Previous article6000 அடி ரீலை எரித்த இயக்குனர் ஶ்ரீதர்! சிவாஜி பட நஷ்டம்! எம்ஜிஆரை வைத்து ஈடு!
Next article1958 ஆம் ஆண்டு வந்த படத்தின் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை!!