இந்த வாரம்.. எந்த ராசிக்கு பாராட்டு..? எந்த ராசிக்கு கவனம் தேவை..?வாங்க பார்க்கலாம்!..

0
318

இந்த வாரம்.. எந்த ராசிக்கு பாராட்டு..? எந்த ராசிக்கு கவனம் தேவை..?வாங்க பார்க்கலாம்!..

மேஷ ராசி காரர்களே இந்த வாரம் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் பெறுமையை கையாளவும். ஆடம்பரமான சிந்தனைகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். கூட்டு வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகத்தின் மூலம் செல்வாக்கு மேம்படும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனத்துடன் இருக்கவும்.நீங்கள் இந்த கடவுளை வழிபாடுங்கள்,
முருகப்பெருமானை வழிபட மேன்மை உண்டாகும்.

ரிஷப ராசி காரர்களே, இந்த வாரம் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கமிஷன் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் சார்ந்த துறைகளில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.நீங்கள் இந்த தெய்வத்தை வழிபாடுவது சிறந்தது.
மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

மிதுன ராசி காரர்களே, இந்த வாரம் மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். எழுத்து தொடர்பான துறைகளில் கற்பனை வளமும், அதிகாரமும் மேம்படும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். செய்கின்ற செயல்களை சூழ்நிலை அறிந்தும், நபர்களின் தன்மை அறிந்தும் மேற்கொள்ளவும்.நீங்கள் இந்த கடவுளை வழிபாடு செய்வது நல்லது.பெருமாளை வழிபட சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

 

Previous articleசனிப்பெயர்ச்சி மீன ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
Next articleபேரிச்சம்பழ கேக்! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here