இந்த வாரம் நீங்கள்… நினைத்தது எல்லாம் நடக்கப்போகிறது… எந்த ராசிக்கு?.

0
249

இந்த வாரம் நீங்கள்… நினைத்தது எல்லாம் நடக்கப்போகிறது… எந்த ராசிக்கு?.

 

மேஷ ராசி அன்பர்களே.. இந்த வாரம் மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முடிவு எடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.மேலும் எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். போட்டி, பந்தயங்களில் ஈடுபடும்போது சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

நீங்கள் வழிபாட வேண்டிய தெய்வங்கள்,முருகப்பெருமானை வழிபட மேன்மை உண்டாகும்.

 

 

ரிஷப ராசி அன்பர்களே.. இந்த வாரம் எண்ணிய பணிகளை திட்டமிட்ட விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கணவன் மற்றும் மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் புரிதலும், தெளிவும் ஏற்படும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றங்களும், அனுபவங்களும் உண்டாகும். வியாபார ரீதியான அனைத்து முயற்சிகள் கைகூடி வரும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். புதுவிதமான இலக்குகள் அமைத்தும் பிறக்கும்.நீங்கள் வழிபாட வேண்டிய தெய்வங்கள்,மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே.. இந்த வாரம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். விளையாட்டு சார்ந்த துறைகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பத்திரிக்கை மற்றும் எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகளும் அதிக வாய்ப்புகளும் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தமாக இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் கைகூடும். உத்தியோகம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் நீங்கள் நினைத்த படியே நடக்கும். வீடு மற்றும் வாகனத்தை புதுப்பிப்பீர்கள். தகவல் தொடர்பு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.நீங்கள் வழிபாட வேண்டிய தெய்வங்கள்,பெருமாளை வழிபட சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

 

 

 

 

Previous articleமீண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு! திக்குமுக்காடும் பயணிகள்!
Next articleமுருங்கைக்கீரை தோசை மற்றும் சாம்பார்! முழு விவரங்கள் இதோ!