1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இது அமல்! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Photo of author

By Rupa

1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இது அமல்! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி மற்றும் பொருட்கள் வழங்குவது குறித்து அமைச்சர் சங்கரபாணி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்ததில், மத்திய அரசானது நியாய விலை கடைகளில் 100 கிலோ அரிசி வாங்கும் மக்களுக்கு அதில் ஒரு கிலோ செறிவூட்டப்படும் அரிசியை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அதன்படி முதல்வரின் ஆணைக்கிணங்க ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அனைத்து நியாய விலை கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அதாவது மக்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் இரும்பு சத்து போலிக் அமிலம் உள்ளிட்டவை சேர்ந்த அரிசி விநியோகம் செய்யப்படும்.

தற்பொழுது நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆட்சி முறையை விட நான்கு மடங்கு அரிசி கடத்தலை தடுத்ததாக கூறியதோடு, இனிவரும் நாட்களில் முற்றிலும் அரிசி கடத்தல் என்ற பேச்சு இருக்காது எனக்கு கூறினார்.

அதேபோல 18 மாதங்களாக சேகரித்த நெல்லை அனைத்தும் முறையாக அரைத்து விநியோகம் செய்து சாதனை படைத்ததாக தெரிவித்தார். மேலும் இனிவரும் நாட்களில் நெல்லிற்கு எந்த ஒரு சேதமும் ஆகாத விதத்தில் குடோன்கள் கட்டும் பணியானது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.