இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்!
டிசம்பர் மாதம் கத்தாரில் கால்பந்து உலககோப்பை நடைபெற உள்ளது.இந்நிலையில் கால்பந்து விளையாட்டில் உலகில் உள்ள ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டில் உள்ள ஜாம்பவான் வீரர் மாரடோனாவிற்கு அடுத்தாக இருப்பது லியோனஸ் மெஸ்ஸி தான்.
மேலும் கால்பந்து விளையாட்டில் விளையாடி வரும் வீரர்களிலேயே கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனஸ் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் தான் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.டிசம்பர் மாதம் கத்தாரில் நடைபெற உள்ள கால்பந்து உலகக் கோப்பை தொடர் தான் எனக்கு கடைசி தொடராக இருக்கும் என மெஸ்ஸி கூறியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
மெஸ்ஸி கால்பந்தில் செய்த சாதனை:
சாம்பியன்ஸ் லீக் குரூப் பிரிவில் அதிக அளவில் 78 கோல் அடித்துள்ளார்,சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா அணிக்காக விளையாடிய இவர் மொத்தம் 120கோல் அடித்துள்ளார்,சாம்பியன்ஸ் லீக் தொடரில் இரண்டாவது இடமாக 123 கோல் அடித்துள்ளார்,லாலீகா தொடரில் 473கோல் அடித்துள்ளார்.மேலும் லாலீகா தொடரில் ஒரே சீசனில் 50 கோல்.
மேலும் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக விளையாடி சில சாதனைகள் செய்துள்ளார்.அர்ஜென்டினா அணிக்காக அதிகமாக 162 போட்டிகள் சென்றுள்ளார்.உலகக் கோப்பை போட்டியில் சிறிய வயதில் அதிக கோல் அடித்தவர் மெஸ்ஸி.
இதனையடுத்து லியோனஸ் மெஸ்ஸி இத்தனை சாதனைகளை அவர் பக்கம் வைத்திருந்தாலும் உலக கோப்பையில் மட்டும் வெற்றி பெற முடியவில்லை.அதனால் இந்த முறை மெஸ்ஸி அவருடைய ஐந்தாவது கால்பந்து உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ளார் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டியில் அர்ஜென்டினாவை ஜெர்மனி அணி வீழ்த்தியது.
அண்மையில் நடந்த கோபா அமேரிக்கா கோப்பையை மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக முதல் முறையாக வென்றார்.அதுபோலவே அவருடைய கடைசி உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்வாரா என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.