நீட் தேர்வில் வெற்றிபெற இந்த யூடியூப் புத்தகம் தான் காரணம்! அரசு பள்ளி மாணவி பேட்டி!
நமது தமிழகத்தில் நீட் தேர்வு என்று கூறினாலே பெரும்பான்மையோர் அதை எதிர்க்க தான் செய்கின்றனர். பல மாணவர்கள் இந்த நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்காகவே பெரும்பாலானோர் இதனை எதிர்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பில் போதுமான அளவு மதிப்பெண் எடுத்தாலும் இந்த நீட் நுழைவு தேர்வு என ஒன்றை வைத்து மாணவர்களின் மருத்துவ கனவை அடியோடு சிதைத்து விடுகின்றனர்.
தற்போது இந்த நீட் தேர்வு தான் அரசியல்வாதிகளுக்கு பேசும் பொருளாக உள்ளது. ஆளும் கட்சியாகட்டும் அல்லது எதிர்க்கட்சியாகட்டும் இதை வைத்து தான் அரசியல் செய்கின்றனர். தற்பொழுது நடந்து முடிந்த நீட் தேர்வில் 104 மதிப்பெண் பெற்று அரசு பள்ளி மாணவி தேர்ச்சி பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே. அம் மாணவிக்கு பாஜக அண்ணாமலை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதனையடுத்து அம் மாணவி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில் நான் எந்த கோச்சிங் கிளாஸ்சுக்கும் செல்லவில்லை. எனக்கெல்லாம் மருத்துவ படிப்பு கிடைக்குமா என்று கேள்விக்குறியாக தான் இருந்தது. செவிலியர் பயிற்சி போன்றவற்றில் சேர்ந்து கொள்ளலாம் என்று எண்ணினேன். பலர் என்னை நீட் தேர்வு எல்லாம் எழுதினால் தேர்ச்சி பெற முடியாது எனக் கூறினார். ஆனால் நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வெறும் 45 நாட்கள் மட்டுமே படித்தேன். யூட்யூபை பார்த்த ராஜேஷ் நீட் பயாலஜி என்ற ஒரு புத்தகம் வாங்கி அதனை வைத்து தான் படித்தேன். நீட் தேர்வு நான் எதிர்பார்த்த வகையில் கஷ்டமாக இல்லை சுலபமாக தான் இருந்தது. இவ்வாறு செய்தியாளருக்கு மாணவி பேட்டி அளித்தார்.