தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே முந்துங்கள்!

Photo of author

By Sakthi

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 5 சமையல்காரர்கள் மற்றும் 6 சலவை செய்பவர்கள் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊதிய விகிதம் -(15,700-58,100)

கல்வி தகுதி– தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்.

வயது வரம்பு: 1-4-2022 அன்று பட்டியல் இனங்கள், பட்டியல் பழங்குடியினர் வயது 18 முதல் 37 வரையில் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வயது 18 முதல் 34 வரையில் இருக்க வேண்டும். பொதுப்புறிவைச் சார்ந்தவர்களுக்கு 18 முதல் 32 வரையில் வயது வரம்பு இருக்க வேண்டும். அதேபோன்று மாற்றுத்திறனாளிகள் 18 வயது முதல் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

முன்னுரிமை அடிப்படையிலான பணியிடங்களுக்கான அரசாணை எண் 122 மனித வள மேலாண்மை துறை, கடந்த 2021 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 2ஆம் தேதி அறிவுறுத்தியதன் அடிப்படையில் இன சுழற்சி முறை பின்பற்றப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30-9-2022 மாலை 5 மணி வரையில்.

விண்ணப்பம், கல்வித் தகுதி, சாதி சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவற்றை நகலாக இணைக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், முன்னுரிமை பெற்றவர்கள் சரியான சான்றிதழை இணைக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு கிடைக்க பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.