உடலுறுவுக்கு மறுத்ததால் ரிசார்ட்டில் 19 வயது இளம்பெண் கொடூர கொலை! பாஜக பிரமுகர் மகன் கைது

0
113

உடலுறுவுக்கு மறுத்ததால் ரிசார்ட்டில் 19 வயது இளம்பெண் கொடூர கொலை! பாஜக பிரமுகர் மகன் கைது

 

உடலுறவுக்கு மறுத்த காரணத்தால் ரிசார்ட்டில் 19 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

உத்தரகண்ட்டில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக அவருடைய பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பின்னர், அவர்கள் இது குறித்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில், போலீசார் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

 

உத்தரகண்ட்டில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர் வினோத் ஆர்யா. இவரது மகன் புல்கித் ஆர்யா அங்குள்ள பௌரி மாவட்டத்தில் ரிசார்ட் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த ரிசாட்டில் அங்கிதா பண்டாரி என்ற பெண் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் 19 வயதான அந்தப் இளம் பெண் கடந்த திங்கட்கிழமை அன்று திடீரென்று மாயமாகியுள்ளார்.இதனையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசில் அவர்கள் இது குறித்து புகார் அளித்தனர்.

 

புகார் அளித்த பிறகு, போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிதா பண்டாரியின் பெற்றோர் சமூக வலைத்தளங்களில் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

 

இதில் புல்கித் ஆர்யா தான் தங்கள் மகள் மாயமானதற்குக் காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். மேலும் தங்கள் மகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகத்துடன் அதில் தெரிவித்தனர்.

 

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பலரும் புல்கித் ஆர்யாவுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்கள் வாயிலாக வலியுறுத்தத் தொடங்கினர். இதனிடையே சூழலை உணர்ந்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவருடன் ரிசாட்டில் பணியாற்றி வந்த மேலும் இரு ஊழியர்களையும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவர்கள் காணாமல் போன அந்த இளம் பெண்ணை கொலை செய்து அருகேயுள்ள கால்வாயில் வீசியதாக வாக்குமூலம் அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கொலை செய்யப்பட்ட அந்த இளம் பெண்ணின் சடலம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதைத் தேடும் பணிகளும் நடந்து வருகிறது. இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் போலீசாரை திசை திருப்ப முயன்று உள்ளனர். இருப்பினும், போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியதும் அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

 

தனது ரிசார்ட்டிற்கு வரும் விருந்தினர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று அங்கிதாவிடம் ரிசார்ட் உரிமையாளரான புல்கித் ஆர்யா வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அங்கிதா தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து பேசி பிரச்சனையை முடித்துக் கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளனர்.இதற்காக கடந்த செப்.18 ஆம் தேதி அங்கிதாவை அவர்கள் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது ரிசார்ட் ஊழியர்கள் இருவரும் இவர்களுடன் வந்து உள்ளனர். ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து அவர்கள் மது அருந்தத் தொடங்கியுள்ளனர். பின்னர் இந்த விவகாரம் குறித்துப் பேசும் போது அங்கிதா மற்றும் புல்கித் ஆர்யா என இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

இது ஒரு கட்டத்தில் சண்டையாக மாறிய நிலையில், புல்கித் ஆர்யா அங்கிதாவை கொன்றதும், அதன் பிறகு அவர்கள் சடலத்தைக் கால்வாயில் வீசியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.