மின்துறையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்துறையில் முறைகேடுகள் நிறைந்த இருப்பதாகத் தெரிவிக்கும் அண்ணாமலை தன்னிடம் இருக்கக்கூடிய ஆதாரங்களை 24 மணி நேரத்தில் பொதுவெளியில் வெளியிட வேண்டும். அப்படி அவரிடம் எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார், தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இது போன்ற செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆதாரம் இருந்தால் வழக்கு போடுங்கள் அதையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவிப்பை அடுத்து அண்ணாமலை தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அதில் மின்துறை அமைச்சர் ஆதாரம் உள்ளதா என்று கேட்கிறார். அவருக்கான ஒரு சாம்பிள் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் ஒப்பந்ததாரர்களுக்கு சென்ற பல மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை பில் அனுமதிக்கு 4 சதவீத கமிஷனை எடுத்துக்கொண்ட பின்னர் சமீபத்திய தினங்களில் திடீரென்று இருபத்தி 29.64 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டது இதற்கு பதில் சொல்லுங்கள் என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பக்கத்திலேயே பதிலளித்து இருக்கின்ற அமைச்சர் செந்தில்பாலாஜி மின்வாரியத் துறை யில் முறைகேடு நடந்திருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்ததற்கு ஆதாரத்தை கேட்டால் வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை யாருக்கு அனுப்புவது என்பது தெரியாமல் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டதை கையில் வைத்துக்கொண்டு கேள்வி எழுப்புகிறார் என தெரிவித்திருக்கிறார். அதோடு அந்த தொகையும் 29.99 கோடி என்று சரியாக எழுதத் தெரியாமல் அதிமேதாவி ஆக எண்ணி 4 சதவீத கமிஷனை என மீண்டும் பொய் புகார் தெரிவித்து கழக ஆட்சிக் ஆபத்து உண்டாக்க பார்க்கிறார். அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் வெளியிட வேண்டும். இல்லையென்றால் அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் மின் கொள்முதல் தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கு சேரவேண்டிய 156471 கோடி நிலுவையில் இருந்தது. அக்டோபர் 1ல் பி எஃப் சி ஆர்.இ.சி நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின்னர் தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவைத் தொகைகள் சரிபார்க்கப்பட்டு அந்தந்த மின் பகிர்மானம் மற்றும் மின் உற்பத்திக்கு உரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர் அலுவலகம் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை என்று பதிலளித்திருக்கிறார்.