இந்திய கடலோர காவல் படையில் பணிபுரிய விருப்பம் இருப்பவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!

0
110
#image_title

இந்திய கடலோர காவல் படையில் பணிபுரிய விருப்பம் இருப்பவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!

இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய கடலோர காவல் படையில்(Indian Coast Guard Store Keeper) Grade I,Store Keeper Grade II,Engine Driver உள்ளிட்ட பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய கடலோர காவல் படை (Indian Coast Guard)

பணி: Store Keeper Grade I,Store Keeper Grade II,Engine Driver

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 15

கல்வி தகுதி: Store Keeper Grade I,Store Keeper Grade II,Engine Driver பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டு இருக்கிறது.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: இப்பணிக்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Matrix Level 4 அளவின் படி மாத ஊதியம் வழங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் Deputation முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://joinindiancoastguard.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அதனை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க 17-10-2023 கடைசி தேதி ஆகும் .

Previous articleஉடல் எடையை குறைக்க வேண்டுமா!!? அப்போ உலர் திராட்சையை பயன்படுத்துங்க!!!
Next articleஉங்கள் தைராய்டு பிரச்சனை அடியோடு நீங்க இந்த 2 ட்ரிங்க் குடிங்கள்!!