சிவன் கோவில் கட்டிய மாமன்னன் ஹிந்து இல்லையென்றால் கிறிஸ்துவனா முஸ்லிமா? என்று அந்த தற்குறியே தெரிவிக்கட்டும் எச் ராஜா ஆவேசம்!

0
186

ராஜராஜசோழன் ஹிந்து இல்லைன்னு சொல்றவங்க முட்டாள் காட்டுமிராண்டியா இருப்பார்கள் என்று தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக சாடியுள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி விருதுகளை பெற்ற இயக்குனர் வெற்றிமாறன். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய அவர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக்குவது என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் பல்வேறு அடையாளங்களை காட்டுகிறார்கள். அந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டுமென்றால், நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அவருடைய இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எச் ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோரும், சீமான் உள்ளிட்ட பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இரு தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா தன்னுடைய வலைதளப் பதிவில் சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறிஸ்துவரா இல்லை பௌத்தரா என்பதை அந்த தற்குறியே சொல்லட்டும் என்று வெற்றிமாறனை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியில் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் ராஜராஜசோழன் ஹிந்தி இல்லை என்று சொல்பவன் முட்டாள் நம்புகிறவன் காட்டுமிராண்டி பரப்புபவன் அயோக்கியன் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Previous articleஉலகக் கோப்பையில் பூம்ராவின் மாற்று வீரர் யார்?…. இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு!
Next articleரஜினியின் மகளாக நடிக்க வைப்பதாக சொல்லி 10 லட்சம் மோசடி செய்த நபர்கள்!