உலகக் கோப்பையில் பூம்ராவின் மாற்று வீரர் யார்?…. இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

0
269

உலகக் கோப்பையில் பூம்ராவின் மாற்று வீரர் யார்?…. இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

பூம்ரா உலகக்கோப்பையில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி விட்டது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பூம்ரா உலகக்கோப்பையில் விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. உலகக்கோப்பைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இந்த செய்தி இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பூம்ரா விளையாடவில்லை. அவர் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுவதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறி இருந்தார். மேலும் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்தும் முழுவதுமாக விலகினார். அவருக்கு பதில் சிராஜ் இந்த தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் பூம்ராவுக்கு மாற்று வீரராக யார் இறக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக இரண்டு வீரர்களின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் பெயர் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷமி ஏற்கனவே உலகக்கோப்பை அணியில் ஸ்டாண்ட்பை வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிசிசிஐ சார்பாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமத மாற்றத்தை தட்டி கேட்ட பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!
Next articleசிவன் கோவில் கட்டிய மாமன்னன் ஹிந்து இல்லையென்றால் கிறிஸ்துவனா முஸ்லிமா? என்று அந்த தற்குறியே தெரிவிக்கட்டும் எச் ராஜா ஆவேசம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here