கிட்சனில் ஸ்பாஞ்ச் பயன்படுத்துபவர்கள் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க! உயிருக்கே ஆபத்தாகிவிடும்!!

Photo of author

By Rupa

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு அவசியமான ஒன்றாகும்.இந்த உணவை சமைக்கும் இடமான கிட்சன் சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.கிட்சனை சுத்தம் செய்ய ஸ்க்ரப்,ஸ்பாஞ்ச்,காட்டன் துணிகள் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படுகிறது.இந்த பொருட்கள் மூலம் நோய் தொற்றுக்கள் பரவ அதிக வாய்ப்பிருக்கிறது.

அதிலும் பாத்திரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஸ்பாஞ்களில் இருந்து நோய் தொற்றுகள் எளிதில் பரவிவிடும்.நீங்கள் பயன்படுத்தும் ஸ்பாஞ்சில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உருவாகி இருக்கும்.இதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது உடலில் நோய் கிருமிகள் நுழைந்து உடல் ஆரோக்கியத்தை பாதிக்க செய்துவிடும்.

நம் உடலுக்கு கெடுதல் விளைவிக்க கூடிய கிருமிகளை ஈர்க்கும் ஆற்றல் கிட்சன் ஸாப்ஞ்ச்க்கு இருக்கிறது.இது கழிவறை கிருமிகளை விட அதிக அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது.கிருமிகள் நிறைந்த ஸ்பாஞ்சை பயன்படுத்தி பாத்திரங்களை சுத்தம்’செய்யும் போது தொற்றுகள் அதில் படிந்துவிடும்.இந்த பாத்திரத்தில் உணவு சமைத்தால் அவை விஷமாக மாறிவிடும்.

கிருமிதொற்று படிந்த ஸ்பாஞ்சால் மூளைக்காய்ச்சல்,குடல் வலி, காய்ச்சல்,குமட்டல்,வாந்தி,இரத்தத்துடன் வயிற்றுப்போக்கு,வயிறுக்கோளாறு,நிமோனியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.சிலருக்கு சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை ஏற்படுத்திவிடும்.எனவே கிட்சன் பாத்திரங்களை சுத்தம் செய்ய சிலிகான் பிரஷ்கள்,ஸ்க்ரப் பிரஷ்கள்,மெட்டல் ஸ்க்ரப்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.