Indian Army: கடந்த 1971 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் இந்திய ராணுவத்தால் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் வாங்கி குவிக்கப்பட்டது.
இந்திய ராணுவம் போரில் பல உத்திகளை பயன்படுத்தி வந்து இருக்கிறது. அந்த வகையில் இந்தியா போருக்காக ஆணுறைகளை வாங்கி பயன்படுத்தி இருப்பது என்பதும் தான் உண்மை. அதாவது கடந்த 1971 ம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை இந்தியா பாகிஸ்தான் மீது போர் நடத்தியது. இரு நாடுகளிலும் போர் பாதிப்புகள் தீவிரமாக இருந்தது.
இந்திய இராணுவத்தினர் சற்று தளர்ந்து இருந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பாக்கிஸ்தான் ராணுவம் இந்தியா விமான தளங்கள் மீது தாக்குதல் அளித்து. இதற்கு எதிர் தாக்குதல் நடத்த நினைத்த இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினரை குவிக்க தொடங்கியது. இரு நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நடைபெற்றது.
இதனால் பாகிஸ்தான் சற்று பின் வாங்க தொடங்கிய பொது இந்திய இராணுவத்தினர் பல ஆயிரம் ஆணுறைகளை வாங்கி குவித்திருக்கிறது.இதன் காரணமாக கிழக்கு பாகிஸ்தான் சிட்டகாங் துறைமுகத்தை தக்க முடிந்து. அதாவது, லிம்பெட் மைன் என்ற வெடிகுண்டை நீரின் வழியாக பயன்படுத்த முடிவு செய்தது இந்திய ராணுவம்.
எனவே அந்த வெடி பொருள் நீரில் நினைவதற்கு அரைமணி நேரம் மட்டுமே கால அவகாசம் இருந்து. அந்த வெடிபொருள் நீரில் நினைந்தால் செயலிழந்து விடும் என்பதால் ஆணு உறைக்குள் அந்த வெடிகுண்டை வைத்து நீரில் செலுத்தி பாகிஸ்தான் கப்பல்களை தாக்கி போரில் வெற்றிப் பெற்று இருக்கிறது.