த்ரெட்ஸ் செயலியில் புதிய அப்டேட்!! மெட்டா நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்!! 

0
104
Threads Active New Update!! New information released by Meta Company!!
Threads Active New Update!! New information released by Meta Company!!

த்ரெட்ஸ் செயலியில்  புதிய அப்டேட்!! மெட்டா நிறுவனம்  வெளியிட்ட புதிய தகவல்!!

த்ரெட்ஸ் என்ற செயலியை ஜூலை 6  ஆம் தேதி மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலையதளங்களின் நிறுவனமான மெட்டா  த்ரெட்ஸ்வை அறிமுகபடுத்தியது நல்ல வரவேற்பை பெற்றது. அந்த செயலி ட்விட்டருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது என்று இணையத்தில் செய்தி பரவி வந்தது.

அதனையடுத்து மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகபடுத்திய 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் அதில் இணைந்துள்ளார்கள் என்ற தகவலும் வந்தது. மேலும் இந்த செயலி மூலம் ட்விட்டர் போல தங்களின் கருத்துகளை பதிவு செய்யவும் மற்றும் பிற கணக்குகளை பின்தொடரவும் முடியும் என்றும், ஒரு கருத்தில் 500 வார்த்தைகளை பதிவிட முடியும் என்றும், ட்விட்டரை விட அதிக வசதிகள் உள்ளது.  இதனை பற்றிய தகவலை மெட்டா சொந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து 10 நாட்களில் த்ரெட்ஸ் 15  கோடி பயனர்களை கடந்தது.   இந்த செயலியை  இன்ஸ்டாகிராம் மூலம் எளிதாக கணக்கு தொடங்கலாம் என்பதால் மக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது மெட்டா நிறுவனம்  த்ரெட்ஸ் செயலியில் புதிய அப்டேட்டை அறிமுகபடுத்தி உள்ளது. அந்த அப்டேட்யில் ரிப்ளை, ரிபோஸ்ட், லைக், சேர் போன்ற வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் குறுந்தகவல் பரிமாறும் அம்சங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து உள்ளது.

Previous articleபாஜக வின் கனவு ஒருபோதும் பலிக்காது!! ஆவேசமாக பேசிய திருமாவளவன்!!
Next articleஇந்த ஒரு பாஸ்போர்ட் இருந்தால் போதும்!! 192 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!!