மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய மூன்று முக்கியமான செயல்கள்!

Photo of author

By Kowsalya

மார்கழி என்றாலே ஆண்டாள் மற்றும் பெருமாளுக்கு உரியது என்று நமக்குத் தெரியும். இந்த மாதத்தை நாம் இது ஒரு பீடை மாதமாக நினைத்து வருகின்றோம்.ஆனால் அது பீடை மாதம் அல்ல! மிகவும் சக்தி வாய்ந்த மாதமாக இந்த மார்கழி மாதம் திகழ்கின்றது.

 

தேவர்கள் கண் விழிக்கும் இந்த மாதத்தில் நாம் தேவர்களுக்கு பணிவிடை செய்து அவர்கள் மனதை குளிரச் செய்யும்பொழுது நாம் நினைத்ததை நடத்தும் மாதமாக இந்த மாதம் அமைகின்றது.

 

அப்படி நாம் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் நாம் இந்த மாதத்தில் மூன்று சிறிய செயல்களை செய்து வரும் பொழுது மனதில் எண்ணிய எண்ணங்கள் அவ்வாறே நிறைவேறும்.

 

1. முதலில் காலையில் நாம் கண்விழிக்க வேண்டும். பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் நான்கு முதல் நான்கரை மணி முதல் பிரம்ம முகூர்த்தம் என்பார்கள். அந்த நேரத்தில் கண் விழித்து நாம் தெய்வத்தை வழிபடும் பொழுது நாம் நினைத்தது நிறைவேறும்.

இப்படி காலை அந்த பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு வாசலில் இரண்டு அகல் விளக்கு தீபங்களை எரிய விட வேண்டும். அதில் நீங்கள் எந்த எண்ணை வேண்டுமானாலும் ஊற்றலாம் நல்லெண்ணெய் அல்லது கூட்டு எண்ணெய் கூட ஊற்றலாம். பின் உங்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி 10 நிமிடம் வழிபடுங்கள். பெண்கள் மாதவிலக்கு காலங்களில் உங்கள் குழந்தைகளையோ அல்லது கணவரையோ கூட ஏற்ற சொல்லலாம் அதில் ஒன்றும் தவறில்லை.

 

2. உங்களால் முடிந்த அளவிற்கு காலை நேரங்களில் பக்கத்தில் நடைபெறும் ஏதாவது ஒரு கோயில் விநாயகர் கோயில் அல்லது முருகர் கோயிலோ அல்லது சிவன் கோயிலோ எந்த கோயிலில் மார்கழி பூஜைகள் நடைபெறுகிறதோ அதற்கு தங்களால் முடிந்தவரை ஒரு அரை லிட்டர் பால் அளவிற்கு கொடுத்து அந்த பூஜை செய்து வந்தால் மிகவும் நல்லது.

 

3. மூன்றாவது அன்னதானம். தங்களால் முடிந்த அளவிற்கு பிரசாதங்களை செய்து வெண் பொங்கலோ, சர்க்கரை பொங்கலோ எதுவாக இருந்தாலும் சரி தங்களால் முடிந்த அளவிற்கு ஏதாவது ஒன்றை செய்து அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அன்னதானம் வழங்கலாம். இல்லையெனில் கோயில் போய் விட்டு வருபவர்களுக்கு அந்த அன்னதானத்தை நீங்கள் வழங்கலாம் அப்படி அந்த அன்னதானத்தை வழங்கும் பொழுது தெய்வங்கள் குளிர்ந்து உங்களது பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள் என்பது ஐதீகம்.

 

அதேபோல் மார்கழி மாதத்தில் காலையில் எழுந்து கோலம் போடுவது மிகவும் நன்று . மார்கழி மாதத்தை வண்ண காலமாக கொண்டாடுகின்றனர். அதனால் காலையில் எழுந்து வண்ணங்களாக பொடும் கோலங்கள் மற்றும்  நீங்கள் அதை பார்க்கும் பொழுது உங்களது நாள் முழுவதும் நன்றாக இருக்கும் நல்லதே நடக்கும் என்பதே பொருள்.