செப்டம்பர் 28ல் ரிலீஸ் ஆகும் மூன்று முக்கிய படங்கள்!!! எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

0
42
#image_title

செப்டம்பர் 28ல் ரிலீஸ் ஆகும் மூன்று முக்கிய படங்கள்!!! எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

செப்டம்பர் 28ம் தேதி அதாவது நாளை முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள மூன்று முக்கிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நாளை அதாவது செப்டம்பர் 28ம் தேதி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவான இறைவன் திரைப்படம், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான சந்திரமுகி 2, நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள சித்தா ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

இறைவன்

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இறைவன். இந்த திரைப்படத்தை இயக்குநர் அஹமத் இயக்கியுள்ளார். நடிகை நயன்தாரா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சைகோ திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இறைவன் திரைப்படம் நாளை(செப்டம்பர்28) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

சந்திரமுகி 2

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி உள்ளது. நடிகர்கள் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருஸ்டி தாங்கே மற்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு இசையமைத்த எம்.எம் கீராவாணி இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படம் நாளை(செப்டம்பர்28) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சித்தா

நடிகர் சித்தார்த் அவர்கள் நடிப்பில் சித்தா திரைப்படம் உருவாகி உள்ளது. சித்தா திரைப்படத்தை இயக்குநர் சு.அருண் குமார் இயக்கியுள்ளார். பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் சித்தா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். சித்தப்பா உறவை மையமாக வைத்து சித்தா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் சித்தா திரைப்படம் நாளை(செப்டம்பர்28) வெளியாகவுள்ளது.

நடிகர் ஹரீஸ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் திரைப்படமும், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள இரத்தம் திரைப்படமும் நாளை(செப்டம்பர்28) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு திரைப்படங்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சலார் திரைப்படமும் நாளை(செப்டம்பர்28) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த திரைப்படத்தின் வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.